மைனஸ் டிகிரியில் உறைந்த காஷ்மீர்... புல்வாமாவில் -2.7°C வெப்பநிலை!

 
காஷ்மீர்

காஷ்மீரில் உயரமான மலைப்பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் கடும் பனிப்பொழிவு நிலவியது. இதன் காரணமாக, இரவு நேர வெப்பநிலை உறைநிலைக்குக் கீழே சென்றுள்ளதால், மக்கள் கடும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். இந்தப் பனிப்பொழிவு, இந்த மாதத்தில் முதல் முறையாக உறைநிலைக்கு மேல் உயர்ந்து காணப்பட்டது.

காஷ்மீர் தற்போது 'சில்லாய் கலான்' என்று அழைக்கப்படும் 40 நாள் கடுமையானக் குளிர்காலத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இந்தக் கடுமையானக் குளிர் காலம் வருகிற டிசம்பர் 21-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்தக் குளிர் காலம் தொடங்குவதற்கு முன்னதாக, லேசான மழை அல்லது பனிப்பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உறைபனி

பனிப்பொழிவு காரணமாக, பல்வேறுப் பகுதிகளில் வெப்பநிலை மைனஸ் டிகிரிக்குச் சென்றுள்ளது. புல்வாமா பகுதியில் இரவு வெப்பநிலை மைனஸ் 2.7 டிகிரி செல்சியஸ் ஆகப் பதிவாகியுள்ளது. அமர்நாத் யாத்திரையின் முக்கிய முகாம்களில் ஒன்றான பஹல்காமில் வெப்பநிலை மைனஸ் 2.4 டிகிரி செல்சியஸ் ஆகப் பதிவாகியுள்ளது.

காஷ்மீர் உறைபனி பனி

இந்தப் பனிக்காலம் தொடங்கி இருப்பதால், பொதுமக்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!