காசிமேடு கீர்த்தனா... கேரம் உலக சாம்பியன்.. "வீடு இல்லை" - தமிழக அரசுக்கு உருக்கமான கோரிக்கை!

 
கீர்த்தனா

மாலத்தீவில் நடைபெற்ற 7-வது கேரம் உலகக் கோப்பைப் போட்டியில், இந்தியாவுக்காக ஒற்றையர், இரட்டையர், குழுப் பிரிவுகளில் என மூன்று தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்த சென்னையின் காசிமேட்டைச் சேர்ந்த வீராங்கனை கீர்த்தனா, தமிழக அரசிடம் தனக்கு வீடு மற்றும் அரசு வேலை வழங்குமாறு உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளார்.

கேரம் சென்னை கீர்த்தனா

கீர்த்தனாவின் சாதனைகள்:

டிசம்பர் 2 முதல் 6 வரை நடைபெற்ற இந்த உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா மொத்தம் 17 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். இதில் கீர்த்தனா மூன்று பிரிவிலும் வென்ற தங்கப் பதக்கங்கள்: மகளிர் ஒற்றையர் பிரிவு - தங்கம், மகளிர் இரட்டையர் பிரிவு (காஜல் குமாரியுடன் இணைந்து) - தங்கம், மகளிர் குழுப் பிரிவு (காஜல் குமாரி, காசிமா, மித்ராவுடன் இணைந்து) - தங்கம்

நேற்று மாலை தமிழகம் திரும்பிய கீர்த்தனாவுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனக்கு ரூ. 1.50 லட்சம் கொடுத்து உதவியதன் மூலமே தான் போட்டியில் பங்கேற்று ஜெயித்ததாகப் பெருமிதம் தெரிவித்தார்.

கீர்த்தனா

பின்னர் அவர், "நான் பத்தாவது வரைக்கும்தான் படிச்சிருக்கேன். நாங்க ஏழ்மையான குடும்பம், வீட்டு வசதி இல்லை. எனக்கு ஏதாவது ஒரு அரசு வேலை, வீடு கட்டித் தருமாறு அரசைத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று வேண்டுகோள் விடுத்தார். கீர்த்தனாவுடன் பயிற்சி பெறும் மற்றொரு தமிழக வீராங்கனை காசிமா, இந்தத் தொடரில் ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் வென்றது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!