கச்சத் தீவு திருவிழா... தமிழகத்திலிருந்து 4000 மீனவர்கள் இலங்கை புறப்பாடு!
ராமேஸ்வரத்திலிருந்து 12 கடல் மைல் தொலைவிலும், இலங்கையில் இருந்து 16 கடல் மைல் தொலைவிலும் நடுக்கடலில் அமைந்துள்ளது கச்சத்தீவு. இங்கு உள்ள புனித அந்தோணியார் ஆலயம் ஆண்டுதோறும் இரு நாட்டு மக்களையும் இணைக்கும் திருவிழாவால் புகழ்பெற்றது. இந்த ஆண்டுக்கான திருவிழா பிப்ரவரி 27 மற்றும் 28 தேதிகளில் நடைபெறுகிறது. முதல் நாளில் புனித கொடி ஏற்றம் நடைபெற்று, சிறப்பு பிரார்த்தனைகள் மற்றும் தேர் திருவிழா நடைபெறும். மறுநாள் காலை திருப்பலியுடன் கொடி இறக்கப்பட்டு விழா நிறைவடையும்.
நாளை காலை 7 மணி முதல் ராமேஸ்வரத்திலிருந்து பக்தர்கள் படகுகளில் புறப்பட உள்ளனர். முதல் படகை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அனுப்பி வைக்க உள்ளனர். விழாவை முன்னிட்டு நேற்று முதல் ராமேஸ்வரத்தில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பக்தர்களின் உடைமைகள் முழுமையாக பரிசோதிக்கப்பட்ட பிறகே அனுமதி வழங்கப்படுகிறது.
இலங்கையிலிருந்து 4000 பக்தர்களும், தமிழகத்திலிருந்து 4000 பக்தர்களும் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 13ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு, 4,000 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. 1974 ஆம் ஆண்டு இந்தியா–இலங்கை ஒப்பந்தத்தின் படி கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டாலும், இத்திருவிழா இரு நாட்டு மக்களையும் ஒன்றிணைக்கும் நிகழ்வாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு 78 படகுகள் மூலம் 3,464 இந்திய பக்தர்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
