கத்ரீனா–விக்கி ஜோடியின் குழந்தை ‘விஹான் கௌஷல் ’... நெகிழ்ச்சி பதிவு!

 
விஹான் கௌஷல்
 

பாலிவுட் நட்சத்திர தம்பதியினர் விக்கி கௌஷல் – கத்ரீனா கைஃப் தங்களது மகனுக்கு ‘விஹான்’ என்று பெயரிட்டுள்ளனர். மகனின் சிறிய கையை தங்களது கைகளுக்குள் வைத்தபடி எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு இந்த நற்செய்தியை இருவரும் அறிவித்துள்ளனர். அந்த பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

கத்ரீனா கைஃப் – விக்கி கௌஷல் தம்பதிக்கு  நவம்பர் 7ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்ததாக அறிவிக்கப்பட்டது. 2021ஆம் ஆண்டு ராஜஸ்தானில் உள்ள நட்சத்திர விடுதியில் இருவரும் மிக பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு தனிப்பட்ட வாழ்க்கையை அமைதியாகவே நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், மகனின் பெயரை அறிவித்த கத்ரீனா தனது இன்ஸ்டா பதிவில், “எங்கள் வாழ்க்கையின் ஒளி. விஹான் கௌஷல். பிரார்த்தனைகளுக்கு கிடைத்த பதில். வாழ்க்கை அழகானது. திடீரென எல்லாமே மாறிவிட்டது. வார்த்தைகளுக்கு அப்பால் நன்றியுணர்வுடன் இருக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு ரசிகர்களின் மனதை நெகிழ வைத்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!