காஸாவில் மீண்டும் தாக்குதல்... குழந்தைகள் உட்பட 31 பேர் பலி!
போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கும் நிலையில், காஸாவில் இஸ்ரேல் சனிக்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 31 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர். கடந்த ஆண்டு அக்டோபரில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்த பிறகு, ஒரே நாளில் ஏற்பட்ட அதிகபட்ச உயிரிழப்பு இதுவாகும். இந்த தாக்குதல் உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
காஸா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் மேற்கு கான் யூனிஸில் அகதிகள் முகாமை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு குடும்பங்களை சேர்ந்த 6 குழந்தைகள், 2 பெண்கள் உயிரிழந்தனர். மேலும் காஸா நகரில் உள்ள காவல் நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 4 பெண் காவலர்கள் உட்பட 14 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதல் வெளிப்படையான போர் நிறுத்த ஒப்பந்த மீறல் என ஹமாஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் தரப்பில், ஹமாஸ் மீறல்களுக்கு பதிலடியாக தாக்குதல் நடத்தப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், போரால் மூடப்பட்டிருந்த காஸா–எகிப்து ராஃபா எல்லைப்பாதை இன்று மீண்டும் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
