கையில் சரக்கு பாட்டிலுடன் கீர்த்தி சுரேஷ் குத்தாட்டம்!! வைரலாகும் புகைப்படங்கள்!!

 
கீர்த்தி சுரேஷ்

தெலுங்கு திரையுலகில் நானியுடன் கீர்த்தி சுரேஷ்  ஜோடி சேர்ந்த திரைப்படம் தசரா. இந்த திரைப்படம் மார்ச் 30ம் தேதி இந்தியா முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி  என 5  மொழிகளில்  வெளியாகும் இப்படத்தின் இசையமைப்பாளர்  சந்தோஷ் நாராயணன்.  இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில்  வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் வைரலானது.

கீர்த்தி சுரேஷ்

 இந்த படத்தின்   படப்பிடிப்பின் இறுதி நாளில்  நடிகை கீர்த்தி சுரேஷ் படக்குழுவில் இருந்த 130 பேருக்கும்  தலா 10 கிராம் தங்க நாணயங்களை வழங்கி கொண்டாடினார்.  இந்நிலையில், தற்போது அப்படத்திற்கான புரமோஷன் பணிகள் தொடங்கியுள்ளன.  அதில் நடிகர் ராணாவும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.  இந்தப் பட ட்ரைலரில், நானி சரக்கு பாட்டிலை வாயில் வைத்து ஒரே கல்பாக அடிக்கும்  காட்சி இடம்பெற்றிருந்தது. புரமோஷன் நிகழ்ச்சியிலும் அதே போல் செய்து காட்டினார்.  ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர் .

கீர்த்தி சுரேஷ்

 அப்போது அங்கு சரக்கு பாட்டில் உடன் வந்த கீர்த்தி சுரேஷ், நானிக்கு போட்டியாக அவரது ஸ்டைலிலேயே சரக்கு பாட்டிலை எடுத்து குடித்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். அந்த பாட்டிலில் வெறும் குளிர் பானம் தான் இருந்தது எனக் கூறி கீர்த்தி சுரேஷ் அங்கு வந்திருந்தவர்களுக்கு அந்த குளிர்பானத்தை வழங்கினார். இந்த விழாவில் தூம் தாம் பாடலுக்கு நானியும் கீர்த்தி சுரேஷும் ஒன்றாக ஆடிப் பாடினர். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web