கேரள இலக்கியத் திருவிழா... சுனிதா வில்லியம்ஸுடன் நடிகை பாவனா!

 
சுனிதா பாவனா

உலகப் புகழ்பெற்ற இலக்கியவாதிகள் மற்றும் சாதனையாளர்கள் பங்கேற்கும் இந்த விழாவில், சாதனைப் பெண்களின் சங்கமம் அங்கிருந்தோரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

நாசாவின் முன்னாள் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் இந்த ஆண்டு கேரள இலக்கியத் திருவிழாவின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். அவருடன் ஒரே மேடையில் அமரும் வாய்ப்பு நடிகை பாவனாவிற்கு வழங்கப்பட்டது.

இந்தச் சந்திப்பு குறித்துத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகை பாவனா, “உத்வேகமளிக்கக்கூடிய சாதனையாளர்களுடன் மேடையில் இருக்கும் பாக்கியம் கிடைத்ததற்கு நன்றி. இது எனது வாழ்நாள் மாற்றத்திற்கானதொரு தருணம் (Life-changing moment)” என்று மனமுருகிப் பதிவிட்டுள்ளார்.

இவர்கள் இருவரும் கைகோர்த்து இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி, "பெண்மையின் வலிமை" எனப் பலராலும் பாராட்டுக்களைப் பெற்று வருகின்றன. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர், நாசாவில் 27 ஆண்டுகள் பணியாற்றினார்.

விண்வெளியில் மொத்தம் 608 நாட்கள் தங்கி வரலாற்றுச் சாதனை படைத்தவர். கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் 27-ஆம் தேதியுடன் விண்வெளிப் பணியில் இருந்து இவர் முறைப்படி ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!