சோகம்... மருத்துவமனையில் இருந்து காணாமல் போன இளைஞர் தூக்கிட்டு தற்கொலை !

 
மருத்துவமனை

 கேரள மாநிலத்தில் மலப்புரம் மாவட்டத்தில்  எடவண்ணா அருகே உள்ள புகமன்னுவில்  பிப்ரவரி 12ம் தேதி புதன்கிழமை 19 வயது இளைஞர் ஒருவர் மரக்கிளையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவரது  பெண் தோழி தற்கொலை செய்து கொண்டு ஒரு வாரத்திற்குப் பிறகு இது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிகிறது.

தற்கொலை

உயிரிழந்தவர்  கரகுன்னுவில் வசித்து வரும்  சஜிர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். தற்கொலை முயற்சியில் மணிக்கட்டை அறுத்துக் கொண்ட பின்னர் மஞ்சேரி மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் செவ்வாய்க்கிழமை முதல் மருத்துவமனையில் இருந்து காணாமல் போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கிருந்து அவர் யாருக்கும் தெரிவிக்காமல் மருத்துவமனையை விட்டு வெளியேறியுள்ளார்.

தற்கொலை

சாஜிர், சாலியார் ஆற்றின் கரையை அடைந்து, புகமன்னு கடவுவில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பிப்ரவரி 3 ம் தேதி, அவரது தோழியான அந்தப் பெண், அவரது வீட்டில் தூக்கிட்டு சடலமாக கிடந்தார். சாஜிர் அவள் உயிரிழந்ததை  அறிந்ததும், அதே நாளில் தனது மணிக்கட்டை அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்தார்.  காவல்துறையினருக்கு  எந்த தற்கொலைக் குறிப்பும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?