‘கேரளா’ மாநிலம் ‘கேரளம்’ என பெயர் மாற்றம்!
கேரளா மாநிலத்தில் பெயரை ‘கேரளா’ என்பதிலிருந்து ‘கேரளம்’ என மாற்றும் மசோதா இன்று ஒன்றிய அமைச்சரவையில் எடுத்துக்கொள்ளப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக இந்த முடிவு முக்கியத்துவம் பெறுகிறது. அதிகாரப்பூர்வ பதிவுகளில் பெயர் மாற்றம் செய்ய மாநில சட்டமன்றம் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
2024ஆம் ஆண்டு முதலமைச்சர் பினராயி விஜயன் இந்த தீர்மானத்தை முன்வைத்தார். அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளிலும் ‘கேரளம்’ என்றே பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார். ஒன்றிய உள்துறை அமைச்சகம் சில தொழில்நுட்ப திருத்தங்களை பரிந்துரைத்ததால், ஜூன் 25, 2024 அன்று சட்டமன்றம் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றியது.
மலையாளத்தில் மாநிலம் ‘கேரളം’ என்றே அழைக்கப்படுகிறது என முதல்வர் குறிப்பிட்டுள்ளார். அரசியலமைப்பின் முதல் அட்டவணையில் உள்ள பெயரை திருத்த வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார். 140 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்திற்கான தேர்தல் மே மாதத்திற்கு முன்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேதி குறித்து தேர்தல் ஆணையம் இதுவரை அறிவிப்பு வெளியிடவில்லை.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
