பட்ஜெட்டில் தமிழகத்திற்கு வெளியாகும் முக்கிய அறிவிப்புகள்.. விவசாயிகளுக்கு ஜாக்பாட்!

 
பட்ஜெட்

நாளை பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், தமிழகத்திற்கான அறிவிப்புகள் குறித்த எதிர்பார்ப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. குறிப்பாக, பிப்ரவரி 2026-ல் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள சூழலில், தமிழகத்திற்குப் பல 'ஜாக்பாட்' திட்டங்கள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

தென் மாவட்டங்களுக்கான சிறப்பு பொருளாதார மண்டலம் (SEZ)

தென் தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த, மதுரை அல்லது தூத்துக்குடி பகுதியில் ஒரு பிரம்மாண்டமான சிறப்பு பொருளாதார மண்டலம் குறித்த அறிவிப்பு பட்ஜெட்டில் இடம்பெற அதிக வாய்ப்புள்ளது. தற்போது சீனாவிலிருந்து வெளியேறும் உற்பத்தி ஆலைகளைத் தமிழகத்திற்கு ஈர்ப்பதும், செமிகண்டக்டர் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் உதிரிபாகங்கள் உற்பத்தியில் தென் மாவட்டங்களை முன்னிலைப்படுத்துவதும் இதன் முக்கிய நோக்கமாகும். இந்த SEZ-களில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை உள்நாட்டுச் சந்தையில் விற்பனை செய்யும்போது விதிக்கப்படும் வரி விதிமுறைகளைத் தளர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

நிர்மலா பட்ஜெட்

உதான் (UDAN) திட்டம் மற்றும் ஏர்போர்ட்கள்

மத்திய அரசின் பிராந்திய இணைப்புத் திட்டமான உதான் 2.0  மூலம் தமிழகத்தின் இரண்டாம் கட்ட நகரங்களுக்குப் புதிய விமானப் போக்குவரத்துச் சேவைகள் அறிவிக்கப்படலாம். மதுரை மற்றும் திருச்சி விமான நிலையங்களின் விரிவாக்கப் பணிகளுக்குக் கூடுதல் நிதி ஒதுக்கப்படலாம். நெய்வேலி, வேலூர் மற்றும் ராமநாதபுரம் போன்ற இடங்களில் உள்ள சிறிய விமான ஓடுதளங்களை மேம்படுத்தி, பயணிகள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளது.

உள்கட்டமைப்பு மற்றும் நீர்வழி மேம்பாடு

கிழக்கு கடற்கரைச் சாலையை (ECR) நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகளுக்குச் சுமார் ₹5,000 கோடி சிறப்பு நிதியை மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை ஒதுக்க வாய்ப்புள்ளது. இது சுற்றுலா மற்றும் துறைமுக வணிகத்திற்குப் பெரும் ஊக்கமளிக்கும்.

தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் மற்றும் சென்னை இடையே சரக்குப் போக்குவரத்தை எளிதாக்க நீர்வழிப் பாதைகளை மேம்படுத்த நிதி ஒதுக்கப்படலாம்.

தமிழக வேளாண் பட்ஜெட்! ஒரு பார்வை!

ரயில்வே துறை: நிலுவையில் உள்ள 5 திட்டங்கள்

தமிழகத்தின் 70 ஆண்டு காலக் கனவுத் திட்டங்கள் உட்பட 5 முக்கிய ரயில்வே திட்டங்களுக்கு இந்த பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மதுரை - அருப்புக்கோட்டை - தூத்துக்குடி புதிய பாதை. ஈரோடு - பழனி புதிய ரயில் பாதை. சென்னை - மாமல்லபுரம் - புதுச்சேரி கடற்கரை ரயில் பாதை. திண்டிவனம் - திருவண்ணாமலை இணைப்பு. பழனி - சாம்ராஜ்நகர் புதிய பாதை.

இந்தத் திட்டங்களை முழுமையாக நிறைவேற்றச் சுமார் ₹33,000 கோடி தேவைப்படும் நிலையில், முதற்கட்டமாக கணிசமான தொகையை நாளை நிதியமைச்சர் ஒதுக்க வாய்ப்புள்ளது.

கடந்த ஆண்டு பட்ஜெட்டில் பீகார் மாநிலத்திற்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தைப் போல, இந்த முறை தமிழகம் மற்றும் மேற்கு வங்காளம் போன்ற தேர்தல் நடக்கவுள்ள மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!