ஜம்மு காஷ்மீர் தாக்குதல்... 5 தீவிரவாதிகள், 3 பாகிஸ்தானியர்? முதற்கட்ட விசாரணையில் வெளியான முக்கிய தகவல்!

இந்தியாவில் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் ஏப்ரல் 22ம் தேதி பைசரன் புல்வெளியில் தீவிரவாதிகளின் திடீர் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. உலக தலைவர்கள் பலரும் இந்த தீவிரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவம் குறித்த விசாரணையை தேசிய புலனாய்வு முகமை (NIA) முதன்மையாக நடத்தி வருகிறது.
இதனையடுத்து இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வரைபடமும் வெளியிடப்பட்டியிருந்தது. அதனைத்தொடர்ந்து தற்போது இந்த தாக்குதலுக்கு பின்னால் 5 தீவிரவாதிகள், 3 பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் 5 முதல் 6 தீவிரவாதிகள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் பைசரன் புல்வெளியில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த 5 தீவிரவாதிகளில் 3 பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என உளவு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மீதமுள்ள 2 பேர் உள்ளூர் தீவிரவாதிகளாக இருக்கலாம் என தெரிகிறது.
NIA அதிகாரிகள் இந்தத் தாக்குதல் குறித்து நேரடியாக பத்திரிகையாளர்களிடம் பேசவோ அல்லது பொது அறிக்கைகளை வெளியிடவோ இல்லை. விசாரணையின் ரகசியத் தன்மை காரணமாக தகவலை வெளியிடவில்லை எனத் தெரிகிறது. தீவிரவாதிகள் எவ்வாறு காஷ்மீர் பள்ளத்தாக்கிற்குள் நுழைந்தனர் என்பது இன்னும் உறுதியாகவில்லை. கதுவா எல்லைப் பகுதிகளில் ஊடுருவல் சாத்தியம் உள்ளதா? எனவும் அது குறித்தும் விசாரணை தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது. தாக்குதல் இடத்தில் நம்பர் பிளேட் இல்லாத மோட்டார் பைக் கண்டுபிடிக்கப்பட்டது, ஆனால் இது தீவிரவாதிகளால் பயன்படுத்தப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை .
தீவிரவாதிகள் சிறு குழுக்களாக செயல்படுவதால், அவர்களின் நடமாட்டத்தை கண்காணிப்பது கடினமாக உள்ளது. பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதால் ஒவ்வொருவரையும் கண்காணிப்பது சவாலாக உள்ளது எனவும் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!