‘கே.ஜி.எப்’, ‘சலார்’ படங்களின் உதவி இயக்குனரின் 4 வயது மகன் லிப்ட்டில் சிக்கி உயிரிழப்பு!

 
‘கே.ஜி.எப்’

கன்னடத் திரையுலகின் பிரபல இயக்குனரான பிரசாந்த் நீலிடம், ‘கே.ஜி.எப்’, ‘கே.ஜி.எப்-2’ மற்றும் பிரபாஸ் நடித்த ‘சலார்’ போன்ற பிரம்மாண்டத் திரைப்படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றிய கீர்த்தன் நாடகவுடாவின் குடும்பத்தில் பெரும் சோகம் நிகழ்ந்துள்ளது. ஐதராபாத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்ற போது, அவரது 4 வயது மகன் லிப்ட்டில் சிக்கி உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்தத் திரையுலகையுமே அதிர வைத்துள்ளது.

பள்ளி மானவி தற்கொலை

பெங்களூருவில் வசித்து வரும் கீர்த்தன் நாடகவுடா - சம்ருத்தி படேல் தம்பதியினர், தங்களது 4 வயது மகன் சிரஞ்சீவியுடன் ஐதராபாத்திற்குச் சென்றுள்ளனர். அங்கு ஒரு கட்டிடத்தில் நடைபெற்ற விழாவின் போது, சிறுவன் சிரஞ்சீவி யாருடைய துணையும் இன்றித் தனியாக லிப்டில் ஏற முயன்றுள்ளான். சிறுவன் உள்ளே நுழையும்போது எதிர்பாராத விதமாக லிப்ட்டின் கதவுகள் வேகமாக மூடிக்கொண்டன. இதில் லிப்ட் கதவுகளுக்கு இடையே உடல் நசுங்கி சிறுவன் படுகாயமடைந்து உயிருக்குத் துடித்துள்ளான்.

சத்தம் கேட்டு ஓடி வந்த பெற்றோர் மற்றும் அங்கிருந்தவர்கள், உடனடியாகச் சிறுவனை மீட்டு ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றிச் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். தன் கண் முன்னாலேயே மகன் உயிரிழந்ததைக் கண்டு பெற்றோர் கதறி அழுதது பார்ப்பவர் நெஞ்சைப் பிழிவதாக இருந்தது.

லிப்ட்டில் மாட்டிக்கொண்ட சிறுவன்

இந்தத் துயரச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கே.ஜி.எப் நடிகர் யஷ், ஆந்திர மாநில துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் கீர்த்தன் நாடகவுடாவின் குடும்பத்திற்குத் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். அடுக்குமாடி குடியிருப்புகளில் லிப்ட் பயன்படுத்தும்போது குழந்தைகளுடன் பெரியவர்கள் உடன் இருக்க வேண்டும் என்பதை இந்தச் சோகமான விபத்து மீண்டும் ஒருமுறை எச்சரிக்கையாக உணர்த்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!