தங்கம் விலை குறையப்போகுது...மீண்டும் திறக்கப்படும் KGF தங்கச் சுரங்கம்.!

இந்தியாவில் இருக்கும் கர்நாடக மாநிலம் கோலார் கிராமத்தில் தங்க சுரங்கம் உள்ளதாக இருந்ததை 1870ல் பெங்களூருவுக்கு வந்த ஆங்கிலேயர் மைக்கேல் ஃபிட்ஸ்ஜெரால்ட் லெவெல்லி தங்கி, கோலார் பகுதியில் உள்ள தங்க சுரங்கத்தை தேடும் பணியில் ஈடுபட்டார். அப்போது, ஆங்கில தளபதியான வாரனுக்கு, இவர் மூலமாக தங்கசுரங்கம் இருக்கும் செய்தி கிடைத்தது.
இதையடுத்து, தளபதி வாரன் முயற்சியில் மண்ணில் இருந்து தங்கத்தை மட்டும் தனியாக பிரித்து எடுத்தனர். கிராம் கணக்கான தங்கம் மட்டும் தான் அவர்களுக்கு கிடைத்தது. இருப்பினும், தளபதி வாரனுக்கு இன்னும் அதீத ஆசை வந்துவிட்டது. கோலார் பகுதியில் ஏராளமான ஆராய்ச்சிகள் மற்றும் ஆய்வுகள் நடத்தப்பட்டதில் பலரின் உயிர் போனது தான் மிச்சம். பின்னர், கோலார் பகுதியில் ஆராய்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனாலும், 1871ல் வாரனுக்கு பிறகு ஆங்கிலேயர் மைக்கேல் ஃபிட்ஸ்ஜெரால்ட் லெவெல்லிக்கு ஆர்வம் அதிகரித்தது.இதனால், கோலார் பகுதியிலேயே அவர் ஒரு இடத்தை தேர்வு செய்தார். அந்த இடம் மைசூர் மகாராஜாவின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்ததால் அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டுமென மைசூர் மகாராஜாவிடம் அனுமதி கேட்டார்.
அவரும் 20 ஆண்டுகள் வரை அனுமதி கொடுத்தார். இதையடுத்து, 1875ல் அந்த இடத்தில் முழு வீச்சி வேலை தொடங்கியது. அங்கு மின்சாரத்தை பயன்படுத்தி விளக்குகள் எரியவிட்டன. இதன் மூலமே இந்தியாவில் மின்சாரம் பெற்ற முதல் நகரமாக கோலார் ஆனது. ஆங்கிலேய அரசின் அதிகாரிகளும், பொறியாளர்களும் அந்த பகுதியிலேயே வீடுகளை கட்டத் தொடங்கினர்.
பிறகு, அங்கு பல குடியிருப்புகள் வந்தநிலையில் அந்த இடத்திற்கு கேஜிஎஃப்,' லிட்டில் இங்கிலாண்ட்' என்று அழைக்கப்பட்டது. 1902ல் கேஜிஎஃப் மொத்த தங்க உற்பத்தியில் உலகிலேயே 6-வது இடத்தை பிடித்தது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, இந்த இடத்தை இந்திய அரசு தன் வசம் ஆக்கிக் கொண்டது. 1956ல் இந்த தங்க சுரங்கம் தேசியமயமாக்கப்பட்டது.1970 முதல் பாரத் கோல்ட் மைன்ஸ் லிமிடெட் நிறுவனம் அங்கு வேலை செய்ய தொடங்கிய நிலையில், ஆரம்பக்கட்ட வெற்றிக்குப் பிறகு லாபம் படிப்படியாக குறைந்தது.
1979க்கு பிறகு அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு கூட சம்பளம் கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டது. 2001ல் தங்கம் எடுப்பதையே அந்நிறுவனம் நிறுத்திவிட்டது. பின்னர், அந்த இடம் பாழடைந்து போனது.கிட்டத்தட்ட 125 ஆண்டுகளில் கேஜிஎஃப்-இல் இருந்து 900 டன்கள் அளவுக்கு தங்கம் உற்பத்தி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, 24 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கேஜிஎஃப்-இல் இருந்து தங்கத்தை பிரித்து எடுக்க மத்திய அரசுக்கு கர்நாடகா ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி பாரத் கோல்ட் மைன்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்குச் சொந்தமான 1,003 ஏக்கர் நிலத்தில் உள்ள 13 குப்பைக் கிடங்குகளில் சுரங்கத்திற்கான மத்திய அரசின் முன்மொழிவுக்கு கர்நாடக அமைச்சரவை பச்சைக்கொடி காட்டியது. இந்தக் குப்பைக் கிடங்குகளில் தான் கடந்த கால சுரங்க நடவடிக்கைகளின் கழிவுகளும் அங்கேயே உள்ளன. இதில், தங்கமும் உள்ளதாக கூறப்படுகிறது.இந்தக் குப்பைக் கிடங்குகளில் 32 மில்லியன் டன் பொருட்கள் உள்ளதாகவும், இதில் இருந்து சுமார் 23 டன் தங்கம் கிடைக்கலாம் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் பணி முழு வீச்சில் தொடங்கும் நிலையில் ஆண்டுக்கு தங்க உற்பத்தி 750 டன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகிலேயே அதிகளவு தங்கத்தை வாங்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கும் . ஆண்டுக்கு 800 - 900 டன் தங்கத்தை இறக்குமதி செய்கிறது. KGF மீண்டும் தொடங்கப்பட்டால், இந்தியா தங்க இறக்குமதியை குறைக்கும். இதன் மூலம் கோடிக்கணக்கான அந்நியச் செலாவணியை மிச்சப்படுத்தலாம். சுற்றுச்சூழல் மற்றும் செயல்பாட்டு அனுமதிகள் முடிந்ததும் முழு அளவிலான உற்பத்தி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!