பகீர் வீடியோ... இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் மீது பிரிட்டனில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் முயற்சி!

 
ஜெயசங்கர்


இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர்  பிரிட்டனுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் திடீரென அங்குள்ள  காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஜெயசங்கர் மீது தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளனர். மேலும், இந்திய தேசியக் கொடியை அமைச்சர் முன்னிலையில் கிழித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.பிரிட்டன், அயா்லாந்து ஆகிய நாடுகளுக்கு ஜெய்சங்கா் 6 நாட்கள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளாா். தனது பயணத்தின் முதல்கட்டமாக பிரிட்டன் தலைநகா் லண்டனுக்கு செவ்வாய்க்கிழமை வந்த அவா், பிரதமா் கியா் ஸ்டாா்மரை சந்தித்தாா். 

வெளியுறவு அமைச்சா் டேவிட் லாமியின் 'செவனிங் ஹவுஸ்' இல்லத்தில் நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஜெய்சங்கர் கலந்துகொண்டார்.அப்போது, செவனிங் ஹவுஸுக்கு வெளியே ஒன்றுதிரண்ட காலிஸ்தான் அமைப்பின் ஆதரவாளர்கள், ஜெய்சங்கருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.செவனிங் ஹவுஸில் இருந்து அமைச்சர் ஜெய்சங்கர் கார் ஏறுவதற்காக வெளியே வந்தபோது, பாதுகாப்பு காவலர்களை மீறி சாலைக்கு மத்தியில் வந்த காலிஸ்தான் ஆதரவாளர் ஒருவர் அமைச்சரை தாக்க முயற்சித்தார்.

பாதுகாப்பு அதிகாரிகள் அவரை தடுத்த நிலையில், அவர் கையில் வைத்திருந்த இந்திய தேசியக் கொடியை கிழித்ததால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.இருப்பினும், காலிஸ்தான் ஆதரவாளர்களை கைது செய்யாமல் பிரிட்டன் காவலர்கள் எச்சரிக்கையுடன் விடுவித்த காட்சிகள் சமூக வலைதளங்களில்  பரவி பெரும் வைரலாகி வருகின்றது. தேசவிரோத நடவடிக்கைகளுக்காக காலிஸ்தான் ஆதரவு 'நீதிக்கான சீக்கியா்கள்  அமைப்பை இந்தியாவில் மத்திய அரசு தடை செய்துள்ளது. 

கனடா, பிரிட்டன்  நாடுகளில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றனர். இந்நிலையில், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க ஆஸ்திரேலியா, கனடா மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளை இந்தியா வலியுறுத்தி வருகிறது. கனடாவில் இந்திய அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை காலிஸ்தான் அமைப்பினர் அவ்வப்போது நடத்தி வருகின்றனர்.   கடந்த மாதம் பிரிட்டனில் கங்கனா நடிப்பில் வெளியான எமர்ஜென்சி திரைப்படத்தின் திரையிடலை காலிஸ்தான் ஆதரவாளர்கள் நிறுத்தி, அந்தப் படத்துக்கு எதிராக பல்வேறு இடங்களில் போராட்டமும் நடத்தியுள்ளனர். பிரிட்டனில் இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டங்களையும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web