நடிகை குஷ்பூவின் மகள் தஹ் லைஃப் படத்தில் உதவி இயக்குனர்... வைரலாகும் இன்ஸ்டா!
தமிழ் திரையுலகில் ‘வருஷம் 16’ படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகி 90களில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் நடிகை குஷ்பூ. கடைசியாக இயக்குனர் சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘அண்ணாத்த’ படத்திலும், விஜய்யுடன் இணைந்து ‘வாரிசு’ படத்திலும் நடித்திருந்தார். இவர் 2000ல் இயக்குனர் சுந்தர்.சியுடன் திருமணம் நடைபெற்றது.
இந்த தம்பதிகளுக்கு அவந்திகா மற்றும் அனந்திதா என்ற இரு மகள்கள்.இதில் மூத்த மகள் அவந்திகா வெளிநாட்டில் திரைத்துறை குறித்து படித்து வருகிறார். அவரது இளைய மகள் அனந்திதா மேக்கப் மற்றும் அழகுத் துறையில் பணிபுரிந்து வருகிறார். அழகு மற்றும் மேக்கப் தொழில் தொடங்குபவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் மேக்கப் அகாடமி ஒன்றையும் நடத்தி வருகிறார்.

அழகு மற்றும் மேக்கப் துறையில் பணிபுரிந்து வரும் அனந்திதா தற்போது திரைத்துறையில் உதவி இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். மணிரத்னம் இயக்கியுள்ள ‘தஹ் லைஃப்’ படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்து இருக்கிறார். ‘தஹ் லைஃப்’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் நடிகை குஷ்பு தியேட்டரில் உதவி இயக்குனர்கள் வரிசையில் அனந்திதாவின் பெயர் இருக்கும் புகைப்படம் ஒன்றை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
