குஷி... குறைந்தது தங்கம் விலை... அட்சய திருதியைக்கு குவிந்த நகை ப்ரியர்கள்!

 
தங்கம்

இன்று அட்சய திருதியை முன்னிட்டு, அதிகாலை  முதலே தமிழகத்தில் நகைக் கடைகள் வழக்கமான நேரத்தை விட முன்னதாக திறந்து வைத்து வியாபாரம் செய்ய துவங்கினார்கள். ஆபரண தங்கத்தின் விலை குறைந்துள்ளதால், வழக்கமான நேரத்தை விட, முன்னதாகவே தங்கத்தின் விலை மாற்றம் நடைமுறைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அட்சய திருதியை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே ஆலயங்களிலும், நகைக் கடைகளிலும் பெண்களின் கூட்டம் அதிகரித்தது. அட்சய திருதியை அன்று ஒரு பொட்டு தங்கமாவது வாங்க வேண்டும் என்றும், இன்று தங்கம் வாங்கினால் தொடர்ந்து செல்வ வளம் அதிகரிக்கும் என்பதும் மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

பல நகைக் கடைகளில் இன்றும் நாளையும் அட்சய திருதியை முன்னிட்டு, கடந்த 10 நாட்களுக்கு முன்பிருந்தே கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் விதமாக முன்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று சென்னையில் காலை நேர விலை நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்துள்ளது இல்லத்தரசிகளை உற்சாகப்படுத்தியுள்ளது.

அதே சமயம், அவர்களை மேலும் உற்சாகப்படுத்தும் வகையில், இன்று அட்சய திருதியை முன்னிட்டு தங்கத்தின் விலை முன்கூட்டியே மாற்றப்பட்டு நகைக் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொதுவாக தினந்தோறும் வார நாட்களில் காலை 9 மணிக்கு மேல் தங்கம் விலை மாற்றப்படும் நிலையில், இன்று காலை 7.30 மணிக்கே தங்கத்தின் புதிய விலை மாற்றம் செய்யப்பட்டு விற்பனை தொடங்கியது

தங்கம்

பல மாவட்டங்களில் அட்சய திருதியை முன்னிட்டு, நகைக்கடைகளின் வாயிலில் தோரணங்கள் கட்டி, அலங்கரிக்கப்பட்டு தங்கத்தின் விற்பனையை அதிகரிக்க வழக்கமான நேரத்தை விட  முன்கூட்டியே கடையைத் திறந்து விற்பனை தொடங்கப்பட்டது.

தொடர்ந்து கடந்த சில நாட்களாக விலை அதிகரித்து வந்த தங்கத்தின் விலை, இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 குறைந்து, 45 ஆயிரத்துக்கு கீழாக சென்றது. இதனால்  இன்று தங்கம் வாங்க திட்டமிட்டிருந்தவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தங்கம் அனுஷ்கா

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.44,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.5,605க்கு விற்பனையாகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி 90 காசுகள் குறைந்து ரூ.80.40க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web