குஷி... சவரனுக்கு தங்கம் 560 ரூபாய் குறைவு! மகளிர் தினத்தில் குவிந்த இல்லத்தரசிகள்!

 
தங்கம் நடிகைகள் பெண்கள் திருமணம்

சவரனுக்கு சிங்கிள் டிஜிட்டில் குறைந்து வந்த ஆபரண தங்கத்தின் விலை, இன்று காலை நேர நிலவரப்படி சவரனுக்கு ரூ.560 குறைந்து இல்லத்தரசிகளை  மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கத்தின் விலையில், இந்த திடீர் விலை குறைவு நகைப் பிரியர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் மத்திய வங்கி, ஐரோப்பிய மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தினை அதிகரிக்க திட்டமிடுகின்றன. இதன் காரணமாக தங்கத்தில் முதலீடுகள் குறையலாம். அதோடு இந்தியாவிலும் இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவும் தேவையினை குறைக்கலாம். ஆக இதுவும் அழுத்தத்தினை கொடுத்துள்ளது. 

இதற்கிடையில் தான் தங்கம் இடிஎஃப்களில் இருந்தும் முதலீடுகள் வெளியேற ஆரம்பித்துள்ளன. இதற்கிடையில் அமெரிக்க வங்கியானது வட்டி விகிதத்தினையும் அதிகரித்துள்ள நிலையில், இது டாலரின் மதிப்பு ஏற்றம் காண வழிவகுத்துள்ளது. இதனால் அமெரிக்கா உட்பட பல நாடுகளில் பணவீக்கம் கடுமையாக அதிகரித்து வருகிறது. இதன் தாக்கம் தங்கத்தில் எதிரொலிக்கிறது.

தங்கம்

அதன்படி, சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து விற்பனை ஆன நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 70 ரூபாய் குறைந்து, ரூ.5,165-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து, ரூ.41,320-க்கு விற்பனையாகிறது.

தங்கம்

அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.4,288-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 57 ரூபாய் குறைந்து, ரூ.4,231-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 70,000 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 2,500 ரூபாய் குறைந்து, ரூ.67,500-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.67.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web