பகீர்... பட்டினி போட்டே1,000 நாய்களைக் கொலை செய்தவர்! சிறையில் தள்ளிய போலீசார்!

 
நாய்

தென்கொரியாவில் வடமேற்கில் அமைந்திருக்கும் கியாங்கி மாகாணத்தில் வசித்துவரும் 60 வயது முதியவரின் செயல் சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஒரு குடும்பத்தினர் தனது வீட்டில் வளர்த்து வந்த நாயை காணவில்லை என்று, அந்நகரில் உள்ள ஒவ்வொரு வீடாக சென்று தேடியிருக்கிறனர். 

அப்போது ஒரு வீட்டில் அவர்களுக்கு சந்தேகம் எழுந்தது. அந்த வீட்டில் இருந்த நிலைமை, நாற்றம், கண்ணில் பட்ட பொருட்களை வைத்து அவர்களை சந்தேகம் அடைந்தனர். மேலும் அந்த வீட்டில் சிறிய கூண்டில் அதிகளவில் நாய்கள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் உடனடியாக விலங்குகள்  ஆர்வலர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அவர்கள் விரைந்து வந்து அங்கு விசாரணை செய்த போது தான்,  அந்த வீட்டில் உள்ள 60 வயது முதியவர் தான் நாய்களை இப்படி அடைத்து வைத்து படுகொலை செய்து வருவது தெரிய வந்துள்ளது.

நாய்

மேலும் போலீசார் சென்று நடத்திய விசாரணையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. அந்த முதிவர், தனது வீட்டில் சாக்கு பைகள், ரப்பர் பெட்டிகள், இரும்புக் கூண்டுகளில் ஆயிரக்கணக்கில் நாய்கள் அடைத்து வைத்து பட்டினி போட்டு படுகொலை செய்துள்ளார். சில நாய்கள் எலும்புக்கூடுகளாக கிடைத்தது.

மேலும் சில நாய்கள் சதைகள் எல்லாம் அழுகி அந்த கூண்டுகளில், சாக்குப்பைகளில், ரப்பர் பெட்டிகளில் கிடந்திருக்கின்றன. பல நாய்கள் உடலில் பலம்இன்றி தண்ணீர், உணவு இல்லாமல் நோய் வாய்ப்பட்டு எழக் கூடிய முடியாமல் கிடந்திருக்கின்றன. கடந்த 2020ஆம் ஆண்டில் இருந்து மூன்று ஆண்டுகளாக இந்த கொடூர செயலை செய்துவந்தது விசாரணையில் தெரியவந்தது. 

நாய்

நாய்கள் பராமரிப்பு இல்லம் என்கிற பெயரில் பராமரிப்புத் தொகையையும் வாங்கிக்கொண்டு உரிமையாளர்களிடம் நாயை வாங்கிய பின்னர் அவற்றை இப்படி பட்டினி போட்டு கொலை செய்து வந்திருக்கிறார். தொடர்ந்து உயிருக்கு ஊசலாடி கொண்டிருந்த நாய்கள் மீட்கப்பட்டு வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. அவரை போலீசார் கைது செய்தனர்.

தென் கொரியாவின் சட்ட திட்டங்கள்படி அந்த முதியவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது 30 மில்லியன் அபராதம் விதிக்கப்படும் என கூறப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web