பயங்கரம்... 8 வயது சிறுமியைக் கொன்று மாவு டப்பாவில் பதுக்கிய 'சைக்கோ' கொலைகாரன் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை!
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், தனது முதலாளியின் 8 வயது மகளைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, உடலைத் தனது அறையில் உள்ள மாவு டப்பாவிற்குள் மறைத்து வைத்த சுனில் (29) என்ற வாலிபரைப் போலீசார் சுட்டுக் கொன்றனர். கடந்த செவ்வாய்க்கிழமை சிப்ஸ் வாங்கச் சென்ற அந்தச் சிறுமி மாயமான நிலையில், தேடுவது போல நாடகமாடிப் போலீசாருக்கே டிப்ஸ் கொடுத்த சுனில் மீது யாருக்கும் சந்தேகம் வரவில்லை. ஆனால், 2 நாட்களுக்குப் பிறகு அவனது அறையிலிருந்து வந்த துர்நாற்றத்தால் ஊர் மக்களே 100 சதவீதம் அதிர்ச்சியில் உறைந்தனர்.
கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, ஒரு பெரிய மாவு கண்டெய்னருக்குள் சிறுமியின் சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. தலைமறைவான சுனிலைப் பிடிக்கப் போலீசார் 25,000 ரூபாய் வெகுமதி அறிவித்துத் தனிப்படை அமைத்தனர். பிரோசாபாத் நோக்கித் தப்ப முயன்ற சுனிலை போலீசார் சுற்றி வளைத்தபோது, அவன் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் போலீசாரைச் சுடத் தொடங்கினான். இதில் ஒரு உதவி ஆய்வாளர் (SI) காயமடைந்ததையடுத்து, போலீசார் நடத்திய அதிரடிப் பதில் தாக்குதலில் சுனில் சம்பவ இடத்திலேயே என்கவுன்ட்டர் செய்யப்பட்டான்.
இந்தத் துயரச் சம்பவம் ஆக்ரா சித்தார்த் நகர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுமிக்கு நீதி கிடைத்துவிட்டதாக ஒருபுறம் மக்கள் கூறினாலும், நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருந்த தொழிலாளியே இத்தகைய கொடூரச் செயலில் ஈடுபட்டது அனைவரையும் நெஞ்சை உலுக்கச் செய்துள்ளது. "குற்றவாளிகளுக்கு இது ஒரு பாடமாக அமையும்" என ஆக்ரா போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது என்கவுன்ட்டர் செய்யப்பட்ட சுனிலின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
