சிக்கன் சாப்பிடாதீங்க!! தீயாய் பரவும் பறவைக் காய்ச்சல்!!

 
பறவை காய்ச்சல்

உலகையே பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கிய கொரோனா தொற்றின் தாக்கம் தற்போது கிட்டதட்ட முடிவுக்கு வந்துள்ளது. இதனால் மக்கள் இயல்பு வாழ்க்கைகுள் திரும்பியுள்ளனர். எனினும  வேறுசில வகையான தொற்று நோய்கள் அவ்வபோது உருவாகி மக்களை அதிர்ச்சியிலும் அச்சத்திலும் ஆழ்த்தி வருகிறது.

கோழி காய்ச்சல்

அந்த வகையில், ஜார்க்கண்டில் மாநிலத்தில் பரவும் கோழி காய்ச்சலால் மக்கள் பீதியடைந்துள்ளனர். அங்குள்ள போகாரோ மாவட்டத்தின், லோஹஞ்சலில் அமைந்துள்ள அரசாங்க கோழி பண்ணையில் கடந்த 5 நாட்களில் மட்டும் 400 க்கும் மேற்பட்ட கோழிகள் பறவைக் காய்ச்சலால் இறந்தன.

இதோடு மட்டுமல்லாமல், போக்காரோ மாவட்டத்தில் மாநில அரசு சார்பில் நடத்தப்படும் கோழி பண்ணையில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. கோழிகளின் உயிரிழப்பு தொடர்பாக மாவட்ட கால்நடை வளர்ப்புத் துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. இதனிடையே,  கோழி இறைச்சிசாப்பிடுவதைத் தவிர்க்குமாறு மக்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்னர்.

கோழி காய்ச்சல்

தற்போது இறந்த கோழிகளின் மாதிரிகளை எடுத்து கொல்கத்தா மற்றும் மத்திய பிரதேசத்தில் உள்ள ஆய்வகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது  ஜார்க்கண்ட்டில் அமைந்துள்ள அரசு கோழி பண்ணைகளில் கடந்த 5 நாட்களில் மட்டும்  400க்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழந்துள்ளன.  இதன் அடிப்படையில் ஜார்க்கண்ட் மாநில அரசு அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளது. மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை பாதிப்பு உள்ள பகுதிகளில் தீவிர ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோழி பண்ணைகளுக்கும் பறவை காய்ச்சல் பரவி உள்ளதா என்பது குறித்து அரசு அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு ஆய்வு நடத்தி வருகின்றனர்.  அத்துடன் மக்கள் சிக்கன் சாப்பிடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ராஞ்சியிலிருந்து கால்நடை பராமரிப்பு துறையினர் இறந்த கோழிகளின் மாதிரிகளை எடுத்துக்கொண்டு கொல்கத்தா மற்றும் மத்திய பிரதேச மாநில ஆய்வகங்களுக்கு பரிசோதனைக்காக எடுத்துச் சென்று இருந்தனர்.
இந்த சோதனையில் அனைத்து கோழிகளுக்கும் பறவை காய்ச்சல் இருந்தது உறுதி செய்யப்பட்டது. அரசு கோழி பண்ணைகளில் 2 வகையான கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த 2 இனங்களிலும் கோழிகளின் இறப்பு காணப்படுவதால் அனைத்து கோழி பண்ணைகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

 

From around the web