அமைச்சர் கே.என்.நேரு துடைக்க முடியாத அவமானம்... உடனடியாக பதவி நீக்கம் செய்க ... விஜய் கடும் தாக்கு!

 
கே.என்.நேரு

 

சென்னை உயர்நீதிமன்றம், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது. அமலாக்கத்துறை அளித்த ஆதாரங்கள் போதுமானவை எனக் கூறி, முதல் கட்ட விசாரணை தேவையில்லை என்று நீதிமன்றம் தெரிவித்தது. நகராட்சி ஒப்பந்தங்கள் மற்றும் வேலைவாய்ப்புகளில் ரூ.1,020 கோடி லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த உத்தரவு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் கே.என்.நேரு

நீதிமன்ற உத்தரவின்படி, தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும். அமலாக்கத்துறை ஏற்கனவே ஆதாரங்கள் சமர்ப்பித்திருந்தும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இப்போது நீதிமன்றம் தலையிட்டுள்ளதால் விவகாரம் புதிய திருப்பம் எடுத்துள்ளது. எதிர்க்கட்சிகள் இதை அரசுக்கு பெரிய பின்னடைவு என விமர்சித்து வருகின்றனர்.

தவெக விஜய்

இந்நிலையில், தவெக தலைவர் நடிகர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார். இதை “துடைக்க முடியாத அவமானம்” என கூறிய அவர், அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 2026 தேர்தலை முன்னிட்டு இந்த விவகாரம் மேலும் சூடுபிடிக்கும் என அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!