திடீர் சுற்றுலா தலமான கிராமம்... டிரெண்ட்டிங்கில் கூமாபட்டி ... என்ன ஸ்பெஷல்! ?

சமூக வலைதளங்களில் அடிக்கடி ஏதாவது ஒரு விஷயம் டிரெண்ட் ஆகிவிடுகின்றது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக இன்ஸ்டகிராம், ட்விட்டர் என சமூக வலைத்தளங்களில் ஏங்க கூமாபட்டிக்கு வாங்க என்று பரவும் வீடியோக்கள்தான் பார்க்க முடிகிறது. இதனால், ஒரே நாளில் அகில உலக பேமஸ் ஆகிவிட்டது கூமாபட்டி.
இந்த வீடியோவில் , " யாருக்கேனும் மன அழுத்தம் இருந்தாலும் சரி, மன உளைச்சல் இருந்தாலும் சரி அதை சரி பண்ண இந்த கூமாபட்டிக்கு வாங்க, இந்த கூமாப்பட்டி ஒரு தனி தீவு, இது ஒரு ஐலேண்டு, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இருக்கும் இந்த கூமாப்பட்டியில் அதிக அளவிலான இயற்கை சார்ந்த இடங்கள் உள்ளது என்று பேசியிருந்தார். அந்த வீடியோவில் கூமாபட்டியை சுற்றியுள்ள இயற்கை வளங்களையும் காட்டியிருந்தார்.
இந்த வீடியோ வைரல் ஆன நிலையில், இளைஞர்கள் பலரும் கூமாபட்டிக்கு படையெடுத்து ஊருக்கு வழி தேட ஆரம்பித்து விட்டனர். இதனால், கூமாபட்டி என்ற கிராமம் இணைய தேடுதலில் முன்னிலையில் இருந்து வருகிறது. இதனால், அந்த கூமாபட்டி கிராமம் தமிழகத்தில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்பு என்ற ஊருக்கு அருகில் மேற்குத் தொடர்ச்சி மலை அடி வாரத்தில்தான் இந்த கூமாப்பட்டி கிராமம் அமைந்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!