3 பேருக்கும் வாழ்நாள் சிறை தண்டனை... கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் பரபரப்பு தீர்ப்பு!

 
கோவை கோவை

 

கோவையில் பரபரப்பை ஏற்படுத்திய கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 பேருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து கோவை மகிளா நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் 2ஆம் தேதி பீளமேட்டில் காதலருடன் காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவி மீது மூன்று பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கோவை

இந்த வழக்கில் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் வசித்து வரும்  கருப்பசாமி, அவரது சகோதரர் காளீஸ்வரன் மற்றும் மதுரையை சேர்ந்த உறவினர் தவசி ஆகியோரை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்திருந்தனர். இந்த வழக்கில் 30 நாட்களில் 250 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு 72 பேரிடம் சாட்சி விசாரணை நடத்தப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கோவை மாணவி கூட்டு பலாத்காரம்

இதில் குற்றவாளிகள் மூவருக்கும் சாகும் வரை வாழ்நாள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.7 லட்சம் இழப்பீடும், அவரது நண்பருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!