திருச்செந்தூரில் முகாமிடும் பக்தர்கள்... ஜூலை 7ம் தேதி குடமுழுக்கு விழா!

ஜூலை 7ம் தேதி காலை 6.15 மணிக்குமேல் 6.50 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் கூட்டம் இப்போதில் இருந்தே அதிகரித்து வருகிறது. நாளை வைகாசி விசாகம் என்பதால் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வரும் ஜூலை 7ம் தேதி காலை 6.15 மணிக்குமேல் 6.50 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதையொட்டி யாகசாலை பந்தல் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இது குறித்து திருக்கோயில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், “திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ராஜகோபுரம் அருகே 8,000 சதுரஅடி பரப்பளவில் யாக சாலை பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. இதில், 76 குண்டங்கள் அமைக்கப்பட்டு, 12 கால யாக சாலை பூஜைகள் வரும் ஜூலை 1ம் தேதி தொடங்கி நடைபெறவுள்ளது.
மேலும், பக்தர்கள் யாகசாலை பூஜைகளை தரிசனம் செய்திடும் வகையில் 2,000 சதுரஅடியில் இடமும் அமைக்கப்பட உள்ளது. ஜூலை 7ம் தேதி திங்கள்கிழமை காலை 6.15 மணிமுதல் 6.50 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!