தீயா வேலை செய்யணும் குமாரு... அடுத்த கட்ட நகர்வுக்கு தயார் ... தவெக சிறப்பு தேர்தல் பயிற்சி கூட்டம்!

 
புஸ்ஸி ஆனந்த்

 

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தல் களேபரங்கள் , பரபரப்புகள் என தமிழக அரசியல் களமே பரபரத்து கொண்டிருக்கும். அதற்காக தற்போதே கூட்டணிகள், அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து முக்கிய கட்சிகள் தங்கள் வேலையை திட்டமிடத் தொடங்கியுள்ளன. அந்த வகையில் தேர்தல் அரசியலில் முதல் முறையாக களம் காணும் விஜயின் தமிழக வெற்றிக் கழக கட்சியும் தேர்தலை எதிர்கொள்ள பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. 

தவெக

அந்த வகையில் ஏற்கனவே கட்சி மாவட்டம், வட்டம் உள்ளிட்ட நிர்வாக பொறுப்புகளுக்கு ஆட்களை நியமித்து, அடுத்ததாக பூத் கமிட்டி உறுப்பினர்களை தேர்வு செய்யும் பணி, அதற்கான ஆலோசனை கூட்டம் என சென்று கொண்டிருக்கும் வேளையில் தவெகவினருக்கு தேர்தல் ரீதியான பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக சென்னை பழைய மாமல்லபுரம் சாலையில் சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மண்டபத்தில் தவெகவினருக்கான தேர்தல் பயிற்சி கூட்டம் நடைபெற்றது. இதில் தவெகவை சேர்ந்த தொழில்நுட்ப பிரிவினர், சமூக ஊடக வலைதள பிரிவினர் ஆண், பெண் என சுமார் 1000 பேர் கலந்து கொண்டனர்.

புஸ்ஸி ஆனந்த்

இந்த பயிற்சி கூட்டம் தவெக தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா மற்றும் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் சமூக ஊடக வலைதளங்களை எவ்வாறு கையாள வேண்டும், கட்சி செயல்பாடுகளை எவ்வாறு மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும் என்பது குறித்த பல்வேறு தகவல்கள் பகிரப்பட்டதாக கூறப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web