கும்பகோணம் தீவிபத்து நினைவு தினம்!! காப்பாத்த வழியில்லாம போச்சே!! பெற்றோர் கண்ணீர் அஞ்சலி!!

 
கும்பகோணம் தீவிபத்து

2004ம் ஆண்டு கும்பகோணத்தில் இதே ஜூலை 16ம் தேதி காசிராமன் தெரு ஸ்ரீ கிருஷ்ணா உதவி பெறும் பள்ளியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் பள்ளியிலேயே  94 குழந்தைகள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். அத்துடன் 19 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர். இந்த துயர சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், தீரா  சோகத்தையும் ஏற்படுத்தியது.

கும்பகோணம் தீ விபத்தில் 94 பள்ளி குழந்தைகள் உயிரிழந்த நினைவு தினம்! பெற்றொர்கள் கண்ணீர் அஞ்சலி!

ஒவ்வொரு ஆண்டும்  உயிரிழந்த குழந்தைகளின் நினைவு தினம் ஜூலை 16-ம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது.  அந்த வகையில் இன்று 19 ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.  குழந்தைகளை இழந்த  குடும்பங்கள் சார்பில்   இறந்த குழந்தைகளின் புகைப்படங்களுக்கு மாலை அணிவித்து , புத்தாடைகள் வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.  

கும்பகோணம் தீ விபத்தில் 94 பள்ளி குழந்தைகள் உயிரிழந்த நினைவு தினம்! பெற்றொர்கள் கண்ணீர் அஞ்சலி!

பல தன்னார்வ அமைப்பினரும், அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் இறந்த குழந்தைகளுக்கு நினைவஞ்சலி செலுத்தும் வகையில்  மலர் தூவி புகைப்படங்களுக்கு மரியாதை செலுத்தினர்.   இந்த துயர சம்பவம் நடந்து 19 ஆண்டுகள் ஆன போதிலும்   பிஞ்சு குழந்தைகளை இழந்த தாக்கம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் இருந்து இன்னும் மறையவே இல்லை.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web