குன்றத்தூர் இரட்டைக் கொலை... 3 பேருக்கு தலா 6 ஆயுள் தண்டணை!
காஞ்சிபுரம் மாவட்டத்தை உலுக்கிய குன்றத்தூர் இரட்டைக் கொலை வழக்கில், இரண்டு பெண் உள்பட மூவர் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டனர். இவர்களுக்கு தலா இரு ஆயுள் தண்டனையும், ரூ.80,000 அபராதமும் விதித்து காஞ்சிபுரம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் இன்று (நவ.20) தீர்ப்பளித்தது. அபராதத் தொகையைப் பாதிக்கப்பட்ட இரு சிறுமிகளுக்கும் வழங்குமாறு நீதிபதி தீப்தி அறிவுநிதி உத்தரவிட்டதுடன், அரசு சார்பிலும் உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

குன்றத்தூர் பகுதியில் வாழ்ந்த தேன்மொழி மற்றும் அவரது தாயார் வசந்தா 2022-ல் கொலை செய்யப்பட்ட வழக்கே இது. வீட்டில் வேலை செய்த சத்யா, ஜெயக்குமார், தவுலத் பேகம் ஆகிய மூவரும் சேர்ந்து வசந்தாவை முதலில் கொலை செய்தனர். பின்னர் ஏமாற்றி வீட்டிற்கு வரவழைக்கப்பட்ட தேன்மொழியும் கத்தியால் தாக்கி கொல்லப்பட்டார். ஆபரணம், விலையுயர்ந்த பொருட்கள் உள்ளிட்டவை திருடப்பட்டன. மயக்கத்தில் இருந்த 6 வயது சிறுமி சுரவிஸ்ரீ பின்னர் விழித்தெழுந்து தங்கை குணஸ்ரீயுடன் எதிர் வீட்டுக்குச் சென்று தகவல் தெரிவித்ததால் வழக்கு வெளிச்சம் கண்டது.

39 சாட்சிகள், பல ஆதாரங்கள் மூலம் குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், ஆறு பேர் மீதும் மூன்று பிரிவுகளின் கீழ் தனித்தனியாக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. குழந்தைகளின் பாதுகாப்பும் எதிர்கால நலனும் கருதி அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
