“அரசியலில் இருந்து மொத்தமாக விலகுகிறேன்..” குன்னம் ராமச்சந்திரன் அறிவிப்பு.. தொண்டர்கள் அதிர்ச்சி!

 
குன்னம் ராமச்சந்திரன்

ஓ.பன்னீர்செல்வம் அணியின் முக்கிய நிர்வாகியாக இருந்த வைத்திலிங்கம் திமுகவில் இணைந்ததைத் தொடர்ந்து, குன்னம் ராமச்சந்திரனும் அதே பாதையைப் பின்பற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், குடும்ப உறுப்பினர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளார்.

குன்னம் ராமச்சந்திரன் இன்று காலை வெளியிட்ட வீடியோ பதிவில், தனது முடிவிற்கான உருக்கமான காரணங்களைப் பகிர்ந்துள்ளார்: "திமுகவில் இணைந்து விட்டால், வீட்டில் இருக்கும் ஜெயலலிதா படத்தை என்ன செய்வாய்?" என்று அவரது தாய் கேட்ட கேள்வி அவரைப் பெரிதும் பாதித்துள்ளது.

வைத்தியலிங்கம்

"இது அசிங்கமாக இல்லையாப்பா?" என்று அவரது மகள் கேட்டதும், இரவு முழுவதும் அவர் தூக்கமின்றித் தவித்ததாகக் குறிப்பிட்டுள்ளார். ஒட்டுமொத்தக் குடும்ப உறுப்பினர்களும் அவர் திமுகவில் இணைவதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால், யாருடைய மனதையும் புண்படுத்த விரும்பாமல் இந்த முடிவை எடுத்துள்ளார். இனி எந்த அரசியல் கட்சியிலும் பயணிக்கப் போவதில்லை என்றும், அரசியலில் இருந்தே முழுமையாக விலகுவதாகவும் அறிவித்துள்ளார். தனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டும் இந்த ஓய்வு முடிவை எடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

திமுகவில் இணைந்த அண்ணன் வைத்திலிங்கம் மற்றும் தனது ஆதரவாளர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்ட அவர், தொண்டர்கள் தங்களுக்கு விருப்பமான இயக்கத்தில் இணைந்து பணியாற்றலாம் எனக் கூறியுள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!