FACT CHECK : 2“குட்டி முருகர் கைது?”… வைரலான செய்திக்கு அரசு விளக்கம்!

 
vellore

வேலூர் தீர்த்தகிரி முருகன் கோவிலில் விபூதி வழங்கி யாசகம் பெற்று வந்த ‘குட்டி முருகர்’ என அழைக்கப்பட்ட குழந்தையை போலீசார் கைது செய்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது. இந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பலரும் உண்மை என்ன என்ற குழப்பத்தில் இருந்தனர்.

இந்த நிலையில், தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது. அந்தக் குழந்தை கைது செய்யப்படவில்லை என்றும், மாற்றுத்திறனாளியான அந்த சிறுவன் பாதுகாப்பாக மீட்கப்பட்டு அருகிலுள்ள பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. குழந்தையின் பெற்றோருக்கும் தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன என கூறப்பட்டுள்ளது.

குழந்தை கைது செய்யப்பட்டதாக பரப்பப்படும் தகவல் முற்றிலும் தவறானது என்றும் அரசு தெளிவுபடுத்தியுள்ளது. சிறார்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பயன்படுத்தி தவறான செய்திகளை பரப்புவது சட்டப்படி குற்றம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த விளக்கம் சமூக வலைதளங்களில் பரவும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!