க்யாரே... செட்டிங்கா?! விஜய்யின் த.வெ. கழகத்தில் இணைகிறார் காளியம்மாள்?! மயிலாடுதுறையில் போட்டி?!

 
காளியம்மாள்

“க்யாரே... எல்லாமே செட்டிங்கா?” என்று சிரிக்கிறார்கள் நாம் தமிழர் தம்பிகள். வரும் தமிழக சட்டசபைக்கான தேர்தலில்  மயிலாடுதுறையில் போட்டியிட காளியம்மாளுக்கு சீட் வழங்கப்படும் என்று உறுதி கூறப்பட்டிருக்கிறதாம். தவெக சார்பில் மயிலாடுதுறையில் காளியம்மாள் போட்டி என்று தவெக வேட்பாளர்களில் ஒருவர் உறுதி செய்யப்பட்டிருக்கிறார் என்கிறார்கள். 

இப்போதைக்கு இது குறித்து எதுவும் அறிவிக்க வேண்டாம் என்றும் விஜய் சார்பில் உத்தரவிடப்பட்டிருக்கிறதாம். இத்தனைக் காலங்களாக தான் ஒவ்வொரு மேடயிலும் திட்டித் தீர்த்த திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் கட்சிகளில் தான் சேர முடியாது என்று தவித்து வந்த காளியம்மாளுக்கு தவெக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. உடனே கட்சியில் இருந்து ஒதுக்கப்பட்டிருந்த காளியம்மாள் செவி சாய்த்து விலகல் முடிவை எடுத்திருக்கிறார் என்கிறார்கள். 

நாம் தமிழர் கட்சியிலிருந்து அடுத்தடுத்து நிர்வாகிகள் விலகி வருகின்றனர். குறிப்பாக  தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த பிறகும், தந்தை பெரியார் குறித்து கடும் விமர்சனங்களை சீமான் முன்வைக்க தொடங்கிய பிறகும் இந்த  விலகல்கள் அதிகமாகி கொண்டே இருக்கின்றன. இந்த விலகல் பட்டியலில் கடந்த  சில மாதங்களுக்கு முன்னரே அடிபட்ட பெயர்களில் நாம் தமிழர் மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள். சீமான், காளியம்மாளை ஒரு தொலைபேசி உரையாடலில் திட்டியதாக செய்திகள் வெளியாகின.  விஜயின் தவெக-வில் ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர்.நிர்மல் குமார் ஆகியோர் இணைய உள்ளதாக செய்திகள் வந்த போது அதில் காளியம்மாள் பெயரும் அடிபட்டது.

விஜய்

அப்போது அதை காளியம்மாள் தரப்பு மறுப்பு தெரிவித்தது. அதேபோல, ஆதவ் அர்ஜுனா மற்றும் சி.டி.ஆர்.நிர்மல் குமார் மட்டுமே தவெகவில் அப்போது இணைந்தனர். அந்த சமயத்தில் இருந்தே நாம் தமிழர் கட்சி நிகழ்வுகளில் இருந்து சற்று ஒதுங்கி இருந்தார் காளியம்மாள். சமீபத்தில்  ஒரு பொது நிகழ்வில் கலந்து கொண்ட காளியம்மாளின் பெயரானது சமூக செயற்பாட்டாளர் என்றே குறிப்பிடப்பட்டு இருந்தது. அப்போது தான் இந்த உட்கட்சி பூசல் விவகாரம் பொதுவெளியில் அதிகமாக பேசப்பட்டது.

அதன் பிறகு தான் தற்போது காளியம்மாள், தான் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுகிறேன் என அதிகாரபூர்வமாக அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில், ” கடந்த வருடகாலமாக ஒரு சமூக மாற்றத்திற்காக ஒரு பெண்ணாக இருந்து எவ்வளவு போராட முடியுமோ, என் ஆற்றலையும் மீறி உங்கள் எல்லோர் அன்பாலும், நம்பிக்கையாலும் இந்த களத்தில் நின்றிருக்கிறேன். எனினும் காலத்தின் சூழல், உயிராக எண்ணி, வழிநடந்த நாம் தமிழர் கட்சி எனும் இந்த பாதை இத்துடன் முடித்து வைக்கப்படுகிறது என்பதை மிகவும் வருத்தத்துடன், கனத்த இதயத்துடனும் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கு பயணித்ததில் பலரின் அன்பு அக்கறை, நம்பிக்கை என்மீதான அளவற்ற பாசம் என்ற அனைத்தையும் மனதில் நிலைநிறுத்தியுள்ளேன்” என குறிப்பிட்டு இருந்தார்.

காளியம்மாள்

இதில் இறுதியில் அவர் கூறிய வாசகம் தான் சற்று உற்றுநோக்க வைத்துள்ளது. தமிழ்த்தேசியத்தை விதைக்கும் வழியில் எம் பயணம் என்றும் தொடரும்” என குறிப்பிட்டுள்ளார்.. 

முன்னதாக தமிழ் தேசியமும், திராவிடமும் தான் தனது இரு கண்கள் என தனது கொள்கைகளை விளக்கியவர் தவெக தலைவர் விஜய்.

இப்படியான சூழலில், தமிழ் தேசியத்தை விதைக்கும் கட்சியில் எனது பயணம் என காளியம்மாள் கூறியிருப்பது. முன்பு உலாவிய வதந்திகளை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்றே கூறலாம்.  இந்த தகவல் வெறும் யூகமே.  அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகும் பட்சத்தில் காளியம்மாள் கூறிய தமிழ்த்தேசிய அரசியல் பயணம் பற்றிய அறிவிப்புகள் வெளியாகலாம் என  எதிர்பார்க்கப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web