சட்டப்பேரவை தேர்தலில் திமுக மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் ... எல்.முருகன் திட்டவட்டம்..!

 
எல் முருகன்


தமிழகத்தில் நாமக்கல் மாவட்டத்தில் தனியார் அறக்கட்டளை மூலம் நடத்தப்படும் இலவச நீட் மற்றும் போட்டித் தேர்வு மையத்தை மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பார்வையிட்டார். அத்துடன்  அங்கு பயிலும் மாணவ, மாணவியருடன் கலந்துரையாடினார்.இதனையடுத்து  செய்தியாளர்களிடம்  நீட் தேர்வு விவகாரத்தில் திமுக போலி நாடகம் நடத்தி வருகிறது.

எல் முருகன்

நீட் தேர்வு மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும் போது நாமக்கல்லைச் சேர்ந்தவர் தான் திமுகவின் மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சராக இருந்தார்.திமுகவில் பலர் அதிகாரமிக்க மத்திய அமைச்சராக இருந்தனர். அப்போது ஏன் அவர்கள் நீட் தேர்வை எதிர்க்கவில்லை.

எல் முருகன்

வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக வரலாற்றில் மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும். தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடிப்பதால், தமிழகத்தின் வளர்ச்சியை முதல்வர் கெடுத்துக் கொண்டு இருக்கிறார். தமிழகத்தின் வளர்ச்சிக்காக, முன்னாள் முதல்வர் கருணாநிதி உட்பட அனைவரும் மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தனர் எனக் கூறியிருந்தார்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web