பெண்களே உஷார்... பிரபல நகைக்கடையில் 5.4 கிலோ போலி தங்க நகைகள் பறிமுதல்!

தமிழகத்தில் தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. கிராம் ரூ10000 ஐ எட்டலாம் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். இதனையடுத்து முதலீட்டாளர்கள் நகைப்பிரியர்கள் இல்லத்தரசிகள் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் பிரபல நகைக்கடையாக கருதப்படும் பாரம்பரியமான வள்ளி விலாஸ் நகைக்கடையில் 5.4 கிலோ தங்க நகைகள் போலி என கண்டறியப்பட்டுள்ளது. இந்த நகைகளை இந்தியத் தர நிர்ணய கட்டுப்பாட்டு அதிகாரிகள் பறிமுதல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம், புதுச்சேரி மாநிலம் உட்ளிட்ட பல பகுதிகளில் வள்ளி விலாஸ் நகைக்கடைகள் 10-க்கும் மேற்பட்ட பிரான்ச் கடைகள் உள்ளது. இந்த கடைகள் அனைத்தும் வள்ளி விலாஸ் என்ற பொது பெயரில் துணைபெயரை சேர்த்துக்கொண்டு வெவ்வேறு உரிமையாளர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது. முதலில் தொடங்கப்பட்ட வள்ளி விலாஸ் கடை பலநூறு ஆண்டுகளை கடந்து செயல்பட்டு வருகிறது. இந்த கடை பாரம்பரியமாக உள்ளதாக மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளது. இந்த பெயர் கொண்ட கடைகளில் நகைகள் எடுப்பதற்கே ஒரு தனி பெரும் கூட்டம் உள்ளது. இந்த கடையின் நகைகளை வேறு எங்கு கொடுத்தாலும் நம்பிக்கையுடன் வாங்கிக் கொள்வார்கள் என பெயர் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பண்ருட்டியில் உள்ள வள்ளி விலாஸ் நகை கடையில் போலியாக ஹால்மார்க் முத்திரையிட்டு நகைகள் விற்பனை செய்யப்படுவதாக சென்னையில் உள்ள இந்திய தர கட்டுப்பாட்டு நிர்ணய அலுவலகத்திற்கு(பிஐஎஸ்) புகார் வந்திருந்தது.
அதன் அடிப்படையில் ஏப் 11ம் தேதி இரவு இந்திய தர நிர்ணய இயக்குனர்கள் ஜீவானந்தம், முனி நாராயணா, ஸ்ரீஜித் மோகன், ஹரிஷ், சம்பத் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பண்ருட்டியில் உள்ள வள்ளி விலாஸ் நகைக்கடைக்கு சென்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சோதனையில் ஹச்.யு. ஐ. டி. என்னும் 6 இலக்க எண் இல்லாமல் போலி ஹால்மார்க் முத்திரையிட்டு நகைகள் விற்பனை செய்வதை உறுதி செய்துள்ளனர். பின்னர் கடையில் இருந்த ரூ 4.80 கோடி மதிப்புள்ள 5.4 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. போலியாக ஹால்மார்க் நகைகளை விற்பனை செய்தது தொடர்பாக முறையாக சம்மன் அளிக்கப்பட்டு விசாரணை நடத்தி குற்றம் உறுதி செய்யப்பட்டால் நகைக்கடை உரிமையாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள கடையின் உரிமையாளர் சரவணன் என்பவர் கடையில் தரமான தங்கத்தை விற்பனை செய்வதாகவும், போலி நகைகள் இல்லை எனவும் கூறியுள்ளார். இது குறித்து உள்ளூர்வாசிகள் கடையின் நம்பிக்கையை கொண்டு திருமணம் போன்ற விஷேசங்களுக்கு நகைகளை வாங்கி செல்கிறோம். இது போன்று போலி ஹால்மார்க் சீல் என்று கூறினால் நாங்க என்ன செய்வது. இதில் பாதிக்கப்படுவது அப்பாவி ஏழைமக்கள் தான் எனக் குமுறுகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!