பெண்களே உஷார்... பைக் சக்கரத்தில் சேலை சிக்கி இளம்பெண் மரணம்!

 
மறுவீட்டுக்கு சென்ற புது மாப்பிள்ளை மர்ம மரணம்!! அதிர வைக்கும் திருப்பங்கள்!!
திருநெல்வேலி மாவட்டம் நாலாட்டின்புதூா் அருகே பைக்கின் பின்சக்கரத்தில் சேலை சிக்கியதில் கீழே விழுந்த இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். 

சிவகாசி அருகே விஸ்வநத்தத்தைச் சோ்ந்த ஐயப்பன் மனைவி ஜோதிமணி (32). இவரும், இவரது உறவினா் மணிகண்டனும் (35) பைக்கில் எப்போதும் வென்றான் ஊரில் உள்ள சோலைச்சாமி கோயிலுக்கு சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. 

மதுரை-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் நாலாட்டின் புதூரையடுத்த கட்டாலங்குளம் விலக்கு அருகே சென்று கொண்டிருந்த போது, ஜோதிமணியின் சேலை பைக்கின் பின்சக்கரத்தில் சிக்கியதில் கீழே விழுந்த அவா் பலத்த காயமடைந்தாா்.

அவரை தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறினா். இது குறித்து நாலாட்டின்புதூா் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web