பெண்களே உஷார்... இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்த ஆன்லைன் டெலிவரி ஊழியர்!

 
சதீஷ்

ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்ட பொருட்களை டெலிவரி செய்வதற்காக சென்றிருந்த இளைஞர் ஒருவர், இளம்பெண் குளித்துக் கொண்டிருப்பதை செல்போனில் வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையைச் சேர்ந்த சதீஷ் குமார்( 28) பிரபல ஆன்லைன் டெலிவிரி நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் வழக்கம் போல் ஆன்லைனில் வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்த பொருளை டெலிவரி செய்வதற்காக கோட்டூர்புரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு சென்றுள்ளார். 

பெண் வீடியோ

சதீஷ்குமார் பொருட்களை டெலிவரி செய்ய சென்றிருந்த போது அந்த வீட்டில் உள்ள இளம்பெண் ஒருவர் பாத்ரூமில் குளித்துக் கொண்டிருப்பதை  பார்த்ததும் ரசித்துக் கொண்டே அவர் குளிப்பதை தனது செல்போனில் ரகசியமாக வீடியோ எடுக்கத் தொடங்கிவிட்டார்.  இதை பார்த்ததும் அப்பெண் கத்தி கூச்சலிட்டார்.

போலீஸ்

உடனே  சதீஷ்குமார் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இது குறித்து  இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து, சதீஷ் குமார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவரிடம் இருந்து செல்போன் மற்றும் இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைனில் ஆர்டர் செய்யும் போக்கு அதிகரித்து வரும் சூழலில் பெண்களே உஷாராக இருங்க. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

 

From around the web