பெண்களே உஷார்... ஹோட்டல் அறையில் திடீரென படுக்கைக்கு கீழிருந்து ஏதோ வாசனை... அலறி கூச்சலிட்ட சுற்றுலாப் பயணி !

 
  பெண்களே உஷார்... ஹோட்டல் அறையில் திடீரென படுக்கைக்கு கீழிருந்து ஏதோ  வாசனை... அலறி கூச்சலிட்ட சுற்றுலாப் பயணி !


தாய்லாந்து நாட்டை சேர்ந்த பெண் பயணி  நடலிசி டக்சிசி, ஜப்பானை சுற்றி பார்க்க வந்திருந்தார்.  நடலிசி டக்சிசிதங்கி இருந்த அறையில் படுக்கையில் ஓய்வெடுத்து கொண்டிருந்தார். அப்போது, கீழிருந்து திடீரென ஒரு வாசனை வந்ததை கவனித்தார்.
அடியில் குனிந்து பார்த்தபோது படுக்கையின் கீழ் மர்ம நபர் ஒருவர் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.  நடலிசி டக்சிசியை  பார்த்தவுடன் அந்த மர்மநபர் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார். இதனைத்தொடர்ந்து நடலிசி ஹோட்டல் நிர்வாகத்திடம் புகார் கொடுத்தார், உடனடியாக  போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணையில் ஈடுபட்டனர்.  ஹோட்டல் வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் செயலற்ற நிலையில் இருந்தன. நடலிசி டக்சிசி தங்கி இருந்த  அறையில் மர்ம நபருக்கு சொந்தமான ஒரு பவர் பாங்கும் யுஎஸ்பி கேபிளும் மீட்கப்பட்டுள்ளன.  இச் சம்பவத்திற்கு பிறகும், ஹோட்டல் நிர்வாகம் நடலிசிக்கு முழு பணத்தை திருப்பிக் கொடுக்க மறுத்துவிட்டது.  


நடலிசி உடனே வேறு ஓர் ஹோட்டலுக்கு மாறிவிட்டார்.  ஆனால் நடலிசி டக்சிசி போலீசில் கொடுத்த  புகார் தொடர்பான எவ்வித ஆவணமும் இதுவரை அவருக்கு வழங்கப்பட்டதாக தெரியவில்லை.  
இச்சம்பவம்குறித்து  நடலிசி  இன்ஸ்டா  வீடியோவில் பதிவிட்டுள்ளார்.   “இந்த பயணம் என் கனவு பயணமாக இருக்க வேண்டியதாய் இருந்தது, ஆனால் நடந்தது என் வாழ்க்கையை முழுமையாக மாற்றிவிட்டது” என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகி  20 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது. நெட்டிசன்கள்  இதற்கு கடும் கண்டனங்களையும் ஆதரவையும் தெரிவித்துள்ளனர். பெண்கள் தனியாகப் பயணிக்கும் போது அதிக முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது  அவசியம் என்பதையும், பாதுகாப்பான ஹோட்டல்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதையும் அறிவுறுத்தியுள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?