தமிழகம் முழுவதும் விடிய விடிய ஈசனை வழிபட்ட லட்சக்கணக்கான பக்தர்கள்... சிவாலயங்களில் மகா சிவராத்திரி!
நேற்று மாலை தொடங்கிய சிவராத்திரி பூஜைகள் இன்று அதிகாலை வரை தொடர்ந்து நடைபெற்றன. தமிழகத்தின் அனைத்து முக்கியக் கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
சென்னையில் உள்ள மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் கோவிலில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் இந்த ஆன்மீக விழாவில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

பிரகதீஸ்வரர் ஆலயத்தில் மாபெரும் நந்திக்குச் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. தஞ்சைப் பெரிய கோவிலில் இரவு முழுவதும் தேவார, திருவாசகப் பாடல்கள் ஓதப்பட்டன.
கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற சிவராத்திரி விழாவில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். சத்குரு முன்னிலையில் நடைபெற்ற யோகேஸ்வர லிங்க மகா அபிஷேகம் மற்றும் கலை நிகழ்ச்சிகளை உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் நேரலையில் கண்டனர்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் 'நாட்டியாஞ்சலி' விழா தொடங்கப்பட்டது. உலகப் புகழ்பெற்ற நாட்டியக் கலைஞர்கள் நடராஜப் பெருமானுக்குத் தங்கள் கலைகளின் மூலம் அஞ்சலி செலுத்தினர்.

சிவன் கோவில்களில் நேற்று இரவு முதல் காலம் மாலை 6 மணிக்கு பால் மற்றும் பஞ்சகவ்ய அபிஷேகம், இரண்டாம் காலம் இரவு 9 மணி முதல் பஞ்சாமிர்த அபிஷேகம், மூன்றாம் காலம் (லிங்கோத்பவ காலம்) நள்ளிரவு 12 மணி - தேன் அபிஷேகம். வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே ஈசனுக்குச் சூட்டப்படும் தாழம்பூ இந்த நேரத்தில் சூட்டப்பட்டது. நான்காம் கால பூஜையாக இன்று அதிகாலை 3 மணிக்கு கரும்புச்சாறு மற்றும் பன்னீர் அபிஷேகம் என நான்கு காலப் பூஜைகள் நடைபெற்றன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரம்பரியமிக்க 'சிவாலய ஓட்டம்' மிக உற்சாகமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் "கோவிந்தா... கோபாலா..." என முழக்கமிட்டபடி 12 சிவன் கோவில்களை நோக்கி ஓடிச் சென்று வழிபட்டனர். நேற்று ஒருநாள் முழுவதும் விரதமிருந்த பக்தர்கள், இன்று காலை சிவ தரிசனம் முடித்த பிறகு தங்கள் விரதத்தைப் பூர்த்தி செய்தனர். இன்று வேலை நாளாக இருந்தபோதிலும், நேற்றைய விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமையை மக்கள் ஆன்மீக ரீதியாகப் பயனுள்ளதாக மாற்றிக்கொண்டனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
