மகா மேளா தொடக்கம்... லட்சக்கணக்கான பக்தர்கள் பிரயாக்ராஜில் புனித நீராடல்!
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் மகாமேளாவில், பவுர்ணமி தினமான இன்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராட லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். கங்கை, யமுனை, சரஸ்வதி சங்கமிக்கும் இந்த புனித இடத்தில் நீராடினால் பாவங்கள் நீங்கும் என்ற நம்பிக்கையால் அதிகாலை முதலே மக்கள் வருகை அதிகரித்தது. காலை 10 மணி வரை சுமார் 9 லட்சம் பக்தர்கள் நீராடியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மகாமேளா நடைபெறும் பகுதியில் 10,000 சதுர அடியில் பத்து நீராடும் படித்துறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பக்தர்களின் போக்குவரத்துக்காக ஒன்பது மிதவைப் பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. இன்னும் லட்சக்கணக்கானோர் வருகை தரும் நிலையில், பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். புனித யாத்திரைத் தலங்களின் அரசனான பிரயாக்ராஜுக்கு வந்த துறவிகள், மதத் தலைவர்கள் மற்றும் பக்தர்களுக்கு வரவேற்பு தெரிவித்த அவர், கங்கை, யமுனை, சரஸ்வதி அன்னைகள் அனைவரின் விருப்பங்களையும் நிறைவேற்ற வேண்டும் என பிரார்த்தனை செய்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
