லாலு பிரசாத் யாதவுக்கு கண் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து டிஸ்சார்ஜ்!

 
லாலு பிரசாத் யாதவ்
 

தில்லியில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) நிறுவனர் லாலு பிரசாத் யாதவுக்கு கண்புரை மற்றும் விழித்திரை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது. தலைநகர் தில்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில், கண் மருத்துவமனைகளுக்கான மையக் குழுமத்தின் தலைவரும் மருத்துவ இயக்குநருமான டாக்டர் மஹிபால் சிங்கின் மேற்பார்வையில் சிகிச்சை நடத்தப்பட்டது.

லாலு பிரசாத் யாதவ்

மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், அறுவை சிகிச்சை சிறப்பாக முடிந்தது, சிக்கல்கள் எதுவும் இல்லாமல் மேம்பட்ட கண் மருத்துவ நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. லாலு பிரசாத் யாதவ் நன்றாக ஒத்துழைத்தும், சிகிச்சைக்குப் பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டும் உள்ளார்.

லாலு பிரசாத் யாதவ்

இந்த நிலையில், மருத்துவக் குழு மற்றும் நலம் விரும்பியவர்களுக்கு அவரது மகள் பாரதி சமூக ஊடகங்களில் நன்றியுரை தெரிவித்துள்ளார். 77 வயதான லாலு பிரசாத் யாதவ் தற்போது கால்நடைத் தீவன ஊழல் வழக்குகளில் ஜாமீனில் வெளியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!