சிங்கப்பூர் ராணுவத்தில் லாலு பேரன்… ரோஹிணி ஆச்சார்யா பெருமை பதிவு!

 
லாலு
 

லாலு பிரசாத் யாதவின் பேரனான ஆதித்யா சிங்கப்பூர் ராணுவத்தின் அடிப்படை பயிற்சியில் இணைந்துள்ளார். இதுதொடர்பான புகைப்படத்தை லாலுவின் மகள் ரோஹிணி ஆச்சார்யா தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து மகிழ்ச்சி தெரிவித்தார். அந்த பதிவு சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் – ராப்ரி தேவி தம்பதியின் இரண்டாவது மகள் ரோஹிணி ஆச்சார்யாவின் மகன் ஆதித்யா. தற்போது 18 வயதை நிறைவு செய்துள்ள அவர், சிங்கப்பூரில் கட்டாயமாக வழங்கப்படும் இரண்டு ஆண்டு அடிப்படை ராணுவப் பயிற்சியில் பங்கேற்கிறார். சிங்கப்பூரில் ஆண் குடிமக்கள் அனைவருக்கும் இந்த ராணுவப் பயிற்சி கட்டாயம்.

இதுகுறித்து ரோஹிணி ஆச்சார்யா, “எனது நெஞ்சம் பெருமையால் நிறைந்துள்ளது. எங்கள் மூத்த மகன் ஆதித்யா ராணுவப் பயிற்சியில் ஈடுபடுகிறார். தைரியமும் ஒழுக்கமும் உன்னை உயர்த்தும். கடினமான போர்களில்தான் வீரர்கள் உருவாகிறார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!