திருப்பரங்குன்றத்தில் தீபத்தூணா? அளவீட்டுக் கல்லா? - தொல்லியல் துறை நேரில் ஆய்வு!

 
திருப்பரங்குன்றம் தீபத்தூண் தொல்லியல் துறை

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூண் குறித்து, அது கார்த்திகை தீபத்தூணா அல்லது நில அளவீட்டுக் கல்லா (சர்வே கல்) என்ற சர்ச்சை நீடித்து வரும் நிலையில், தமிழக தொல்லியல் துறையைச் சேர்ந்த 7 பேர் கொண்ட குழுவினர் நேற்று (டிசம்பர் 10) அந்தத் தூணைத் தீவிரமாக ஆய்வு செய்தனர்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று ராம. ரவிக்குமார் தொடர்ந்த வழக்கில், உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தீபம் ஏற்றலாம் என்று உத்தரவிட்டார். ஆனால், கோயில் நிர்வாகம் தீபம் ஏற்றவில்லை. தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்தாலும், அது தள்ளுபடியானது. தற்போது இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவாக நிலுவையில் உள்ளது. இதற்கிடையே, நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்தத் தூண் குறித்து இரண்டு விதமான தகவல்கள் பரவி வருகின்றன.

திருப்பரங்குன்றம் தீபத்தூண் தொல்லியல் துறை

சுவாரசியமாக, தமிழக அரசின் தொல்லியல் துறையே 1981-ல் வெளியிட்ட 'திருப்பரங்குன்றம்' எனும் நூலில், மலை உச்சியில் உள்ளது கார்த்திகை தீபத்தூண்தான் என்று குறிப்பிட்டுள்ளது. அந்நூலின் 129-வது பக்கத்தில், "இந்த தீபத்தூண் நாயக்கர் காலத்தைச் சேர்ந்தது. இதில் புண்ணியவான்கள் அனைவரும் விளக்கேற்றலாம்" என்று கல்வெட்டு குறிப்பிடுவதாக தகவல் இடம் பெற்றுள்ளது.

திருப்பரங்குன்றம்

தமிழக அரசின் தொல்லியல் துறை துணை இயக்குநர் யதீஷ்குமார் தலைமையில், உதவி இயக்குநர் லோகநாதன் மற்றும் அதிகாரிகள் அடங்கிய 7 பேர் கொண்ட குழுவினர் நேற்று காலை 8 மணியில் இருந்து பகல் 12 மணி வரை அந்தத் தூணில் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். தீபத்தூணின் முழு பகுதியையும் ஆய்வு செய்த அதிகாரிகள், அதில் உள்ள விவரங்களை நகல் எடுத்துக்கொண்டனர். எனினும், இந்த ஆய்வின் முடிவுகள் அல்லது இது குறித்த தகவல் எதையும் தொல்லியல் துறையினர் இதுவரை வெளியிடவில்லை.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!