நிலத்தகராறு... பெண்கள் , குழந்தைகள் ஒருத்தரையும் விட்டு வைக்கல.... கொலைவெறித் தாக்குதல்... பகீர் வீடியோ!
உத்தரப் பிரதேசம், உன்னாவ் மாவட்டத்தில் நிலம் தொடர்பான முன்விரோதம் காரணமாக கொடூர மோதல் வெடித்துள்ளது. அந்தப் பகுதியில் உள்ள பிண்டு என்ற ரவுடி, ஒரு குடும்பத்தைத் தீவிரமாகத் தாக்கி, தடி மற்றும் கட்டைகளை பயன்படுத்தியுள்ளார். காட்சிகள் பார்ப்பவர்களின் நெஞ்சை பதற வைக்கும் வகையில், அவர் பெண்கள் மற்றும் சிறுமிகளையும் கவனிக்காமல் ஆவேசமாக கொடூரமாக தாக்கியுள்ளார்.
जमीनी विवाद में दबंग ने महिलाओं बच्चियों को लाठी डंडों से पीटा...वीडियो वायरल है..!
— Rahul Saini (@JtrahulSaini) January 2, 2026
पिटाई करने वाले शख्स का नाम पिंटू है..आरोपी दबंग है....इसपर कई आपराधिक मुकदमे भी दर्ज है..!
मारपीट में दीपा, नीलम, चंद्रावती और आराधना सहित बच्चे घायल हुए है..पुलिस जांच कर रही है।
यूपी के… pic.twitter.com/TvOeRmLApC
இந்த தாக்குதலில் தீபா, நீலம், சந்திராவதி மற்றும் ஆராதனா உள்ளிட்ட பெண்களும், சில குழந்தைகளும் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிண்டு மீது ஏற்கனவே பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோவின் ஆதாரத்தைப் பொறுத்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அந்த ரவுடியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
