எல்லையில் கண்ணிவெடி விபத்து… ராணுவ வீரர் படுகாயம்!
ஜம்மு-காஷ்மீரின் குல்மார்க் பகுதியில் பாதுகாப்புப் பணியில் இருந்த இந்திய ராணுவ வீரர் ஒருவர் கண்ணிவெடி வெடித்ததில் படுகாயமடைந்தார். இந்த சம்பவம் புதன்கிழமை அதிகாலை நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்லைப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது இந்த விபத்து நடந்தது. சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விபத்துக்குப் பிறகு ராணுவ வீரர் உடனடியாக மீட்கப்பட்டார். பின்னர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் காயமடைந்த வீரர் பற்றிய முழு விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

இந்திய எல்லைப் பகுதிகளில் ஊடுருவல்களைத் தடுப்பதற்காக கண்ணிவெடிகள் பொருத்தப்பட்டுள்ளன. மழை அல்லது வெள்ளம் போன்ற இயற்கை காரணங்களால் அவை இடம் மாறும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது. இதுபோன்ற விபத்துகள் தவிர்க்க பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
