நியூஸிலாந்தில் நிலச்சரிவால் இருவர் உயிரிழப்பு.... மண்ணில் புதைந்த வீடுகள் !
நியூஸிலாந்தின் வடக்குத் தீவுப் பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வியாழக்கிழமை அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவுகளில் இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் மாயமாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வீடுகள் மற்றும் சுற்றுலா பயணிகள் தங்கும் முகாம்கள் மண்ணில் புதைந்தன.

‘வெல்கம் பே’ குடியிருப்புப் பகுதியில் அதிகாலை 4.50 மணியளவில் வீடு ஒன்றின் மீது நிலச்சரிவு ஏற்பட்டது. வீட்டில் இருந்த இருவர் உயிர்தப்பினர். ஆனால் இடிபாடுகளில் சிக்கிய இருவர் சடலமாக மீட்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து மவுண்ட் மவுங்கனுய் மலை அடிவாரத்தில் உள்ள ‘பீச்சைட் ஹாலிடே பார்க்’ சுற்றுலா முகாமிலும் நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கு வாகனங்கள், அறைகள் மற்றும் கட்டடங்கள் முழுவதும் மண்ணில் புதைந்தன.

இந்த முகாமில் தங்கியிருந்த சிறுவர்கள் உட்பட சிலர் மாயமாகியுள்ளனர். மோப்ப நாய்கள் மற்றும் நவீன கருவிகள் மூலம் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே பலத்த மழையால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு முழு உதவியும் வழங்கி வருவதாக பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் தெரிவித்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
