பகீர்...நிலச்சரிவால் சுற்றுலா முகாம்கள் மூடல்... பலர் மாயம்!

 
new zealand new zealand

நியூசிலாந்தின் ஆக்லாந்தில் இருந்து தென்கிழக்கே சுமார் 230 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மவுங்கானுய் மலையடிவாரத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. மலையடிவாரத்தில் அமைந்துள்ள மவுவோ பகுதியில் செயல்பட்டு வந்த பிரபல சுற்றுலா முகாம்தளத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது. சுற்றுலா பயணிகள் தங்கியிருந்த கூடாரங்கள் மீது பாறைகளும் மண்ணும் சரிந்து விழுந்தன.

இந்த நிலச்சரிவில் முகாமில் இருந்த கூடாரங்கள், ஒரு குளியலறை மற்றும் நிறுத்தப்பட்ட வாகனங்கள் மண்ணில் அடித்துச் செல்லப்பட்டு முழுமையாக புதைந்தன. தகவல் கிடைத்ததும் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கக்கூடியவர்களை தேடும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்த விபத்தில் பலர் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக அந்த பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வந்தது. இதன் காரணமாக பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!