நிலச்சரிவில் 8 பேர் பலி; 82 பேர் மாயம்... தேடும் பணிகள் தீவிரம்!
இந்தோனேசியாவின் ஜாவா தீவில் சனிக்கிழமை வெள்ளி மழை மற்றும் வெள்ளத்தினால் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது 8 பேர் உயிரிழந்தனர். மேற்கு ஜாவா மாகாணத்தின் மேற்கு பாண்டுங் மாவட்டத்தில் உள்ள பாசிர் லங்கு கிராமத்தில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் 34 வீடுகள் மண்ணுக்குள் புதைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால், மண்ணில் புதைந்த 82 பேரை மீட்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. பேரிடர் மீட்புப் படையினரும், அப்பகுதி மக்களும் இணைந்து காணாமல் போனவர்களைத் தேடி வருகிறார்கள். இருப்பினும், தொடர்ந்த மழை மற்றும் நிலப்பரப்பின் உறுதிப்பாடு இல்லாத காரணத்தால் மீட்புப் பணிகளில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

பாதுகாப்புக்காக, நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தைச் சுற்றியுள்ள 100 மீட்டர் தொலைவில் வசிக்கும் குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளன. இந்த முயற்சிகள் நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் உடனடி உதவி வழங்கும் நோக்கில் நடைபெற்று வருகின்றன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
