நிலச்சரிவில் சிக்கி 7 பேர் பலி... தொடர்மழையால் பெரும் சோகம்!
தென்கிழக்கு பிலிப்பின்ஸ் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டாவோ ஓரியண்டல் மாகாணத்தின் மாட்டி நகரில் வெள்ளிக்கிழமை அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டது. பெரிய பாறைகள் மற்றும் மண் சரிந்து ஒரு வீடு முழுவதும் புதைந்தது. அந்த வீட்டில் இருந்த 4 பேர் உயிரிழந்தனர்.
அதேபோல் டாவோ டீ ஓரோ மாகாணத்தின் மொன்காயோ நகரிலும் நிலச்சரிவு ஏற்பட்டது. இடிபாடுகளுக்குள் சிக்கிய 3 பேர் உயிரிழந்தனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
தொடர் மழையால் சுமார் 10 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு நடவடிக்கையாக 3,200-க்கும் மேற்பட்டோர் அரசு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பல பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
