லடாக்கில் கோரப் பனிச்சரிவு... ஜோஜி லா கணவாயில் 7 பேர் பலி... வாகனங்கள் புதைந்தன!
லடாக் யூனியன் பிரதேசத்தின் உயரமான மலைப்பகுதியான ஜோஜி லா கணவாயில் இன்று ஏற்பட்ட பயங்கரப் பனிச்சரிவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் வாகனங்கள் வரிசையாகச் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக மலை உச்சியிலிருந்து டன் கணக்கிலான பனி சரிந்து விழுந்தது. இதில் பல வாகனங்கள் அப்படியே பனிக்குள் சிக்கிப் புதைந்து போயின. இந்தத் துயரச் சம்பவத்தில் சிக்கி இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்; மேலும் 5 பேர் படுகாயமடைந்து உயிருக்குத் போராடி வருகின்றனர்.

சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும், துணை நிலை கவர்னர் வி.கே. சக்சேனா அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். கார்கில் நகரச் சிறப்பு காவல் கண்காணிப்பாளரை உடனடியாக மீட்புப் பணிகளில் இறங்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார். தேசியப் பேரிடர் மீட்புப் படை (NDRF), எல்லைச் சாலைகள் அமைப்பு (BRO) மற்றும் ராணுவ வீரர்கள் 100 சதவீதம் உஷார் நிலையில் இருந்து மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். இந்தச் சம்பவத்திற்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள மத்திய மந்திரி ஜிதேந்திர சிங், மீட்புப் பணிகளைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
பனிக்குள் இன்னும் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால், தேடுதல் வேட்டை 24 மணி நேரமும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. காயம் அடைந்த 5 பேரும் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படலாம் எனத் தெரிகிறது. மலைப்பாதைகளில் பயணம் செய்வோர் வானிலை எச்சரிக்கைகளைக் கவனித்துச் செயல்படுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
