3 நாட்களாக தொடர் கனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்குடன் நிலச்சரிவு... விரைந்த தேசிய பேரிடர் மீட்பு படை!

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இன்று முண்டக்கை மற்றும் சூரல்மலை பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு அச்சம் ஏற்பட்டுள்ளது. 2024 ஜூலை 30ம் தேதி இதே பகுதியில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அத்துடன், 100-க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்துவிட்டன. இந்த துயர சம்பவம் நடந்து ஒரு ஆண்டு நிறைவு பெற்ற நிலையில் மீண்டும் அதே போலவே வெள்ளம் ஏற்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தற்போது மீண்டும் பெய்து வரும் கனமழை காரணமாக முண்டக்கை ஆற்றில் மண் கலந்த நீர் பெருக்கெடுத்து ஓடுவதாகவும், இது மக்களிடையே பீதியை கிளப்பியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியதால், மேற்கு தொடர்ச்சி மலையின் பல பகுதிகளில் 3 நாட்களாக இடைவிடாத மழை பெய்து வருகிறது. முண்டக்கையில் ராணுவம் அமைத்த தற்காலிக பெய்லி பாலம் அதிரும் அளவுக்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு நிலச்சரிவால் சிதைந்த வீடுகளுக்கு இடையே வெள்ளம் பாய்ந்தோடுவது, மக்களுக்கு கடந்தகால பேரழிவை நினைவூட்டுவதாக உள்ளது. மீட்பு மற்றும் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள, தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் மோப்ப நாய்கள் கொண்ட குழுவினர் வயநாடு, காசர்கோடு, மலப்புரம் மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர். மக்கள் அச்சமடைய வேண்டாம் எனவும், அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் வயநாடு மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!