பட்ஜெட்டில் அசத்தல்... மாணவர்களுக்கு மீண்டும் மடிக்கணினி திட்டம்!

இன்று சட்டசபையில் தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு உரையாற்றி வருகிறார். அதில் மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மாணவர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக மகளிருக்கு ரூ.10 லட்சம் வரை வங்கிக் கடன் வழங்கி தொழில்திறன் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் மகளிரை தொழில் முனைவோராக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். 20 லட்சம் கல்லூரி மாணவ - மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்படும். கல்லூரி மாணவர்களுக்கு அவரவர் விரும்பும் வகையில் கைக்கணினி அல்லது மடிக்கணினி வழங்கப்படும். ரூ.10 லட்சம் வரை பெண்கள் பெயரில் பதிவு செய்யப்படும் அசையா சொத்துகளுக்கு பதிவு கட்டணம் 1 சதவீதம் குறைக்கப்படும். மூன்றாம் பாலினத்தவருக்கு மாதம் ரூ1000 உதவித்தொகை மற்றும் அவர்களும் இனி ஊர்க்காவல் படையில் சேர்க்கப்படுவார்கள் என அறிவித்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!