கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் ... டிசம்பர் 19ல் முதல்வர் தொடக்கம்!

 
laptop
 

மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் பொருளாதார வலுவுக்கும் முக்கியத்துவம் அளித்து, தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் போன்ற திட்டங்கள் மூலம் மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில், உயர்கல்வியை தடையின்றி தொடர கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை அரசு தொடங்க உள்ளது. 2025 சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு தீவிரமாக தயாராகி வருகிறது.

முதற்கட்டமாக 20 லட்சம் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 10 லட்சம் மாணவர்களுக்கான לப்டாப் கொள்முதல் பணிகள் திட்டமிட்டபடி நடைபெற்று வருகிறது. இதற்கு எச்பி, டெல், ஏசர் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களிடம் இருந்து மடிக்கணினி வாங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, டிசம்பர் 19-ம் தேதி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெறும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் இந்தத் திட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்க உள்ளார்.

பிப்ரவரி இறுதிக்குள் 10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் பணியை முடிக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. கலை, அறிவியல், பொறியியல், வேளாண்மை, மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் இறுதி ஆண்டு மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற உள்ளனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி உறுதியாக கிடைக்கும் நிலையில், தனியார் கல்லூரி மாணவர்களுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.2,000 கோடி மதிப்பிலான இந்தத் திட்டம் மூலம் மாநிலம் முழுவதும் சுமார் 20 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!